இங்க நான் தான் கிங்கு-விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

சந்தானத்திற்கு மற்றொரு ஹிட்டு

25 லட்சம் ரூபாய் கடனை அடைப்பதற்காக கல்யாணம் செய்ய வேண்டும் எனத்துடிக்கிறார் ஹீரோ சந்தனம். அதனால் தன் கல்யாணத்திற்கு நிறைய வரதட்சணை தரும் வரங்களை தேடுகிறார். அப்படியொரு வரம் இருப்பதாக சொல்லப்பட சந்தானம் நம்பி அந்த வரனை ஏற்கிறார். ஆனால் அதன்பின் நடப்பதெல்லாம் உல்டாவாகி, ஒரு டெட்பாடி, தீவிரவாதி சம்பந்தம் என கதை வேறோர் ரூட் பிடித்துச் செல்கிறது. செல்லும் ரூட் காமெடி என்பதால் படம் பாஸ் ஆகிறது

சந்தானம் ஜஸ்ட் லைக் தட்டில் செய்யும் கேரக்டர் என்பதால் இந்தக் கேரக்டரை ஈசியாக டீல் செய்துள்ளார். ஹீரோயின் அழகாக இருப்பதோடு இயல்பாக நடிக்கவும் செய்துள்ளார். இந்தப்படத்தின் நடிகர்களில் முதல் வின்னர் தம்பி ராமையா தான். மனிதர் கலக்கியுள்ளார். பால.சரவணன் தம்பி ராமையா கெமிஸ்ட்ரி வேறலெவலில் வொர்க்வுட் ஆகியுள்ளது. சுவாமிநாதன், ஷேசு, முனிஷ்காந்த், விவேக்பிரசன்னா என மொத்த காமெடி டீமும் போட்டிப்போட்டு சிரிக்க வைக்கின்றனன்

இமானின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். குறிப்பாக ஒரு ட்ராவல் பாட்டு செம்ம. ஒளிப்பதிவாளர் தன் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். ஷார்பான எடிட்டிங்கும் இப்படத்தின் இன்ட்ரெஸ்டிற்கு காரணம்

சின்ன கதையை கன்னாபின்னா என திரைக்கதையால் பின்பாதியில் இழுத்தாலும் ஆங்காங்கே சில காமெடி எபிசோடுகள் வொர்க் ஆகிவிட்டது. அதனாலே கிங் ரசிகனோடு சிங் ஆகிடுறார்

3/5