மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாடமாகப்போகும் ‘இரு காதல் ஒரு கதை’
டி.ஜே.மூவீஸ் லட்சுமி கதிர் தயாரிப்பில் பி.பன்னீர் செல்வம் இயக்கத்தில் தயாராகி வரும் படம் ’இரு காதல் ஒரு கதை’.
இந்தப் படத்தில் ஜனா நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் ஆதித்ய கிருஷ்ணா, கானா பாலா, பாண்டு, ராஜ்கபூர், மதுரை முத்து, டி.பி.கஜேந்திரன், ‘லொள்ளுசபா’ சாமிநாதன், தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணா, உமா பத்மாநாபன், வினிதா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு குஹா பாடல்களை எழுதி இசையமைக்கிறார். படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ள. அனைத்துப் பாடல்களும் அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் ஐந்து விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது என இசையமைப்பாளர் குஹா கூறுகிறார்.
தயாரிப்பு – டி.ஜே.மூவீஸ், தயாரிப்பாளர் – லட்சுமி கதிர், இயக்குனர் – பி. பன்னீர்செல்வம், இசை, பாடல்கள் – குஹா, ஒளிப்பதிவு – எல்.கே.விஜய், படத் தொகுப்பு – சாய் சுரேஷ், கலை – லோகு, நடனம் – தினா, காதல் கந்தாஸ், உடை – வீரபாபு, ஸ்டில்ஸ் – ராஜா, ஒலி வடிவமைப்பு – எம்.ரவி, மேலாளர்கள் – கணேஷ், என்.பாபு, டிசைன்ஸ் – மித்ரா மீடியா, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
இப்படத்தைப் பற்றி இயக்குனர் பன்னீர்செல்வம் கூறியதாவது,
“மாணவர்கள் படிக்க வேண்டிய வயதில் நன்றாகப் படிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மற்ற தவறான விஷயங்களில் ஈடுபடுவதால், ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி இப்படம் விளக்குகிறது.
கல்வியின் முக்கியவத்துவத்தை விளக்கும் விதத்தில் இப்படத்தை எடுத்திருக்கிறோம். அதே சமயம் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான படமாகவும் இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு இப்படம் மிகவும் பயனுள்ள ஒரு படமாக இருக்கும். மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இப்படம் ஒரு பாடமாகவும் இருக்கும்.
தணிக்கைக் குழுவினர் இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்,” என இயக்குனர் கூறினார்.