யோகிபாபு படத்தில் நாயகியான ஜோதிகா! – காமெடி படம்தாங்க…

Get real time updates directly on you device, subscribe now.

திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் பிஸியாக ஆரம்பித்து விட்டார் நடிகை ஜோதிகா.

சமீபத்தில் வந்த அவருடைய ‘காற்றின் மொழி’ படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் புதிய படத்தை அவரது கணவரும், நடிகருமான சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

பிப்ரவரி 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் பூஜையில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

இவர்களுடன் ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர் பிரபுபடத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், படத்தின் இயக்குநர் கல்யாண் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் கல்யாண் ஏற்கனவே பிரபுதேவாவை வைத்து ‘குலேபகாவலி’ படத்தை இயக்கியவர்.

Related Posts
1 of 48

நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் இந்த கதையில் வித்தியாசமான கேரக்டரில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை வீர சமர் கவனிக்க, எடிட்டிர் விஜய் படத்தை தொகுக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த காமெடி படத்தின் படபிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது.

இதற்கிடையே அறிமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா ஆசிரியையாக நடித்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.