ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்! – மீட்பார்களா ரஜினியும், கமலும்?

Get real time updates directly on you device, subscribe now.

மிழ்சினிமாவுக்கு ரஜினி – கமல் என்கிற இரண்டு உச்ச நட்சத்திரங்களைக் கொடுத்தவர் மறைந்த ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தர்.

தனது கவிதாலயா நிறுவனம் சார்பில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தயாரித்தும், இயக்கியும் வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு கவிதாலயா நிறுவனம் எந்தப் படத்தயாரிப்பிலும் இறங்கவில்லை.

இதற்கிடையே நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு ஒன்று திரையுலகினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆமாம், இயக்குநர் சிகரம் லே.பாலசந்தரின் வீடும் அலுவலகமும் ஏலத்துக்கு வருவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. UCO வங்கியில் வாங்கிய ஒரு கோடியே 36 லட்சம் கடன் பணம் செலுத்த முடியாமல் போனதால் கே.பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்சன்ஸ் நிறுவனம் மற்றும் அவரது வீடு உள்ளிட்டவை ஏலத்துக்கு வர இருப்பதாக மேலும் அந்த ஏல  அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts
1 of 91

ரஜினியும், கமலும் இன்றுவரை உச்ச நட்சத்திரங்களாக அசைக்க முடியாத இடத்தில் இருப்பதற்கு கே.பாலச்சந்தர் கொடுத்த பல ஹிட் படங்கள் தான் முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை.

அப்படிப்பட்ட கே.பாலச்சந்தர் மகிழ்ந்து, சிரித்து, உண்டு, உறங்கிய வீடும், பல அற்புதமான படங்களைத் தர காரணமாயிருந்த கவிதாலயா தயாரிப்பு நிறுவனமும் ஏலத்துக்கு சென்றால் அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட ரஜினி – கமல் இருவருக்குமே அவமானம் தான்.

ரஜினியும், கமலும் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தில் 1 கோடியே 36 லட்சம் கடன் என்பதெல்லாம் ஒரு பெரிய தொகையே இல்லை. ஆளுக்கு 68 லட்சம் ரூபாயை பகிர்ந்து போட்டால் கூட கே.பியின் அலுவலகத்தையும், வீட்டையும் மீட்டு அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க முடியும்.

அந்த அரும்பணியை ரஜினி – கமல் இருவரும் சேர்ந்து செய்வார்களா? என்பதே விமர்சர்களின் கருத்தாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.