‘கபாலி’க்கு குடைச்சல்! : இத்தோட நிறுத்திக்கங்க மலேசிய ரசிகர்களே…

சிண்டுகள், பொண்டுகள் நடித்த படங்களின் போட்டோக்களே மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு ரிலீசுக்கு ஒரு மாதம் இருக்கும் போதுதான் மீடியாக்களுக்கு எண்ணி எண்ணி கொடுக்கப்படுகின்றன.
அவர்களுக்கே இப்படி என்றால் ரஜினி நடிக்கும் படத்தின் சமாச்சாரங்கள் எந்தளவுக்கு சீக்ரெட்டாக இருக்க வேண்டும்?
ரஜினி படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் படத்தின் யூனிட்டில் உள்ளவர்களைத் தவிர வேறு யாருமே உள்ளே போக முடியாது. அந்தளவுக்கு செக்யூரிட்டி பலப்படுத்தப்பட்டிருக்கும்.
ஆனால் ‘கபாலி’ படத்திலோ எல்லாம் அதிர்ச்சி தரும் விதமாக இருக்கிறது.
குறிப்பாக மலேசியாவில் நடந்து வரும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ரசிகர்கள் மூலமாக உடனுக்குடன் புகைப்படங்களாக சமூகவலைத்தளங்களில் தினமும் குவிந்து வருகின்றன.
இதனால் படத்தில் ரஜினியின் கெட்டப் ரகசியம் உள்ளிட்ட எல்லா சுவாரஷ்யங்களும் அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் ”தயவு செய்து கபாலி படத்தின் புகைப்படங்களை ஷேர் செய்ய வேண்டாம்” என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இத்தோட உங்க வேலையை நிறுத்திக்கங்க மலேசிய ரசிகர்களே…