யு-ட்யூப்பில் 1 மில்லியன் சாதனை படைத்த கலர்ஃபுல் ‘கலகலப்பு 2’ டீசர்!

Get real time updates directly on you device, subscribe now.

2012 ஆம் ஆண்டு சுந்தர்.சி. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் ‘கலகலப்பு’. முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் qபேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூலில் சாதனை படைத்தது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்க அவ்னி மூவி மேக்கரிஸ் சார்பில் குஷ்பு தயாரித்துள்ளார். முழுப் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்த நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Related Posts
1 of 28

டிசம்பர் 24 ஆம் தேதி இரவு 11 மணிக்கு படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு, படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர் யூடியூப்பில் No.1 – ல் டிரெண்டாகி தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

கலகலப்பு – 2 ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்தை, 2018 ஆம் வருட தொடக்கத்தில் ஜனவரி மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.