அரவிந்த்சாமியுடன் ஜோடி சேர்ந்த ரெஜினா!

Get real time updates directly on you device, subscribe now.

‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக எண்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

பண விஷயத்தில் கறார் காட்டுகிற பேர்வழி இல்லாதவர் என்பதால் அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்கள்.

அந்த வகையில் விக்ரம் நடித்து வெற்றி பெற்ற ‘ஸ்கெட்ச்’ படத்தை தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் ‘கள்ளபார்ட்’ என்ற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

அரவிந்த்சாமி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்குகிறார்.

Related Posts
1 of 139

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த் ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வசனம் – ராதாகிருஷ்ணன், ஒளிப்பதிவு – அரவிந்த் கிருஷ்ணா, இசை – நிவாஸ் கே.பிரசன்னா, திரைக்கதை எழுதி இயக்குகிறார் – ராஜபாண்டி.

இப்படத்துக்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இன்று செப் 19ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து 30 நாட்கள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பா.ரங்கநாதன்.எம்.எல்.ஏ , தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் விஜய் சந்தர், ஜெயபிரகாஷ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குட்டிபத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர்.