ஓ இதுதான் அந்த ரகசியமா..? : மிரள வைத்த ‘மொட்டை’ கார்த்தி
கார்த்தியை பல சினிமா விழாக்களில் பார்த்த அத்தனை பேருக்கும் அவர் தொப்பி அணிந்து வருவதன் ரகசியம் என்ன என்பதே தெரியாமல் இருந்தது.
அவரும் அது குறித்தான ரகசியத்தை மீடியாக்களிடம் கசிய விடாமல் பாதுகாத்து வந்தார்.
ஆனால் இப்போது அந்த மொட்டை ரகசியம் வெளிப்பட்டிருக்கிறது.
ஆமாம், ட்ரீம்ஸ் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வரும் ‘காஸ்மோரா’ படத்துக்குத்தான் அந்த மொட்டை என்பது அதிகாரப்பூர்வமாக மீடியாக்களில் வெளியான கார்த்தியின் வித்தியாசமான தோற்றங்களுடன் கூடிய போட்டோக்கள் நிரூபித்தன.
தோளின் ஒருபுறம் ஈட்டிமுனை, மறுமுனையில் கழுகு சின்னம் என போர்வீரன் தோற்றத்துடன் தாடியும் மீசையுமாக அவர் நிற்பது நெட்டில் கூட டிரெண்டாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இது இன்னொரு ‘பாகுபலி’ மாதிரி கம்பீரமாக இருக்கிறதே..? என்று ரசிகர்களை வியக்க வைத்தன காஸ்மோராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்.
அதிக பொருட்செலவில் தயாராகி வரும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக நயன்தாரா, திவ்யா நடிக்கின்றனர். கார்த்தியின் அப்பாவாக விவேக் நடிக்கிறார். ‘இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்கிற தர லோக்கலான ஹிட் படத்தை கொடுத்த கோகுல் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப்படம் அவரது முதல் படத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான படம் என்பதை புகைப்படங்கள் வெளிப்படுத்துவதால் ‘காஸ்மோரா’ மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருப்பது என்பது மறுக்க முடியாத உண்மை.