கார்த்தியுடன் ஜோடி சேரும் ‘கீதா கோவிந்தம்’ ஹீரோயின்!
கார்த்தி நடிக்கும் புதிய படத்தை சிவகார்த்திகேயனை வைத்து ‘ரெமோ’ படத்தை கொடுத்த பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இதனால் தற்காலிகமாக ‘K19’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
‘தேவ்’ படத்தின் படு தோல்வியால் அப்செட்டான கார்த்தி இனி நடிக்கும் படங்களில் கவனமாக இருக்க வேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறாராம். அதானாலே இந்தப்படத்தை ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ படங்களைப் போல ஆக்ஷன், எமோஷனல் கலந்த காமெடிப்படமாக எல்லோரையும் கவரும் வண்ணம் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் இயக்குனர்.
படத்திற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ரஷ்மிகா மண்டன்னா நடிக்கிறார். இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன்நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதைத்தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகவுள்ளார்.
முதற்கட்ட பணிகளில் மும்முரமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு மார்ச் இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்க உள்ளது.
‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ போன்ற படங்கள் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி படங்களை மிக கச்சிதமாக செய்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தற்பொழுது, ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் பெயரிடப்படாத ‘K18’ படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது.