‘சிங்கம் 3’ விநியோக உரிமை : ரசிகர்களையும் சம்பாதிக்க விட்ட சூர்யா!

Get real time updates directly on you device, subscribe now.

suriya

ங்கள் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களுக்கு பண உதவி செய்ய வேண்டாம். அவர்களை ஒரு தொழில் செய்ய விட்டு சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தாலே எல்லா மாஸ் ஹீரோக்களும் தங்கள் ரசிகர்களுக்கு செய்யும் நன்றிக்கடன் தான்.

அப்படி ஒரு பிரம்மாதமான வாய்ப்பைத்தான் தன் ரசிகர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா.

சிங்கம் படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து சூர்யா – இயக்குநர் ஹரி காம்பினேஷனில் தயாராகியிருக்கிறது சிங்கம் 3 திரைப்படம்.

எஸ் 3 என்று சுருக்கமாக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸருக்கே ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அந்த எதிர்பார்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் எஸ் 3 படத்தை தமிழகம் முழுவதும் தானே ரிலீஸ் செய்கிறது.

Related Posts
1 of 32

அதேசமயம் இப்படத்தை கேரளாவில் யாருக்கு ரிலீஸ் உரிமையைக் கொடுக்கலம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தான் கேரளாவிலுள்ள ‘ஆல் கேரளா சிங்கம் சூர்யா ஃபேன்ஸ் அன்ட் வெல்ஃபேர் அசோஷியேன்’ ரசிகர் மன்றத்தினர் ‘எஸ் 3’ விநியோக உரிமையைக் கேட்டிருக்கிறார்கள்.

கேட்ட விலை கட்டுப்படியானதால் யோசிக்காமல் அவர்களுக்கு விநியோக உரிமையைக் கொடுக்க ஓ.கே சொல்லியிருக்கிறார் சூர்யா.

இந்தியாவிலேயே ஒரு மாஸ் ஹீரோ நடித்த படத்தின் விநியோக உரிமையை அவர்களது ரசிகர்களே வாங்கியிருப்பது இதுதான் முதல்முறை என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

ஆடியோ வடிவில் கேட்க :