திருமணத்துக்குப் பிறகு ‘தேவதாஸ்’ ஆக மாறிய தம்பி ராமையாவின் மகன்!
சேரனின் ‘திருமணம்’ படத்தைத் தொடர்ந்து தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடித்து வரும் படம் ‘தேவதாஸ்’.
வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தம்பி ராமையா மற்றும் ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்குகிறார்.
‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா- யோகிபாபுவுடன் இப்படத்தில் இணைகிறார்.
மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இந்த உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக நகர்த்துகிறாராம் இயக்குனர்.
இப்படம் பார்க்கும் அனைவரும் பல கட்டங்களில் தாங்கள் சந்தித்த, அனுபவித்த, கடந்து வந்த நினைவுகள் பிரதிபலிக்கும் விதமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.
நாயகிகளாக மனிஷா யாதவ், ‘சகா’ நாயகி ஐரா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் உமாபதியோடு இணைகின்றனர்.