பேர்ல இருக்கிற ஜாதியை தூக்குங்க.., அப்பத்தான் உருப்படுவீங்க… : கரு.பழனியப்பன் பொளேர்!

Get real time updates directly on you device, subscribe now.

urumeen

கேரளாவிலிருந்து தமிழ்சினிமாவுக்குள் படையெடுக்கும் ஹீரோயின்கள் கூடவே தங்களது ஜாதியையும் தங்கள் பெயருக்குப் பின்னால் சுமந்து கொண்டு வருவது அதிகமாகி விட்டது.

குறிப்பாக லட்சுமிமேனன், ஸ்வேதா மேனன், ரேணுகா மேனன், ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார் என ஜாதிக்கு கொடி பிடிக்கும் நடிகைகள் எக்கச்சக்கம்.

ஆனால் அப்படி வந்த நடிகைகளை விட எந்த ஜாதிப்பெயரையும் சேர்க்காமல் வந்த நயன்தாரா, த்ரிஷா போன்றவர்கள் தான் இன்றுவரை கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு நின்று ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதையே தான் ‘உறுமீன்’ ஆடியோ பஙஷனில் வலியுறுத்தினார் இயக்குநர் கரு.பழனியப்பன்.

பாபி சிம்ஹா ரேஷ்மி(மேனன்) நடித்த ‘உறுமீன்’ படத்தின் ஆடியோ பங்ஷனில் கலந்து கொண்ட அவர் படத்தின் ஹீரோயினுக்கு அட்வைஸ் செய்தார்.

என்ன அது?

”இந்தப் படத்தோட ஹீரோயின் ரேஷ்மிமேனனை குறும்பட காலத்துல இருந்தே நான் பார்த்துக்கிட்டிருக்கேன். அப்பத்திலிருந்து இப்போ வரைக்கும் அவருக்குரிய இடத்துக்கு அவர் வரல. அவரோட இடத்துக்கு வரலேன்னா என்ன அர்த்தம்?

கேரளாவிலிருந்து இங்க வந்து ஒருநாளைக்கு அசிஸ்டெண்ட் பேட்டா 15,000 ரூபாய் வாங்கலேன்னு அர்த்தம். அந்த இடத்துக்கு வரணும்னா சின்னச் சின்ன மாற்றங்களை செஞ்சா வந்துடலாம்.

ரேஷ்மிமேனன் தன் பேர்ல இருக்கிற மேனனை கழட்டிட்டாப் போதும். நல்லா வந்தாலும் வந்துடும். ஏன்னா, இந்தியாவுலேயே தமிழ்நாட்டுல மட்டும் தான் இன்னும் பேருக்குப் பின்னால ஜாதியை போடாம இருக்காங்க. அதுக்குக் காரணம் பெரியார்ன்னு ஒரு கிழவன் கையில மூத்திர வாளியை துக்கிக்கிட்டு தெருத்தெருவா பேசுனதுனால வந்த விளைவு.

சரி பெரியார் மாதிரியே சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சிட்டோம். ரேஷ்மிக்கு பின்னாடி மேனன் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?ன்னு நெனைச்சா என்ன விட்டுருங்க.

ஆனா மேனனை தூக்கினா மாற்றம் வரும்னு நம்புறேன் என்றார் கரு.பழனியப்பன் ஆணித்தரமாக.

அதையும் தான் செஞ்சுப் பார்த்திடுங்களேன் ரேஷ்மி!!!