ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தனுஷின் ‘மாரி’
வேலையில்லா பட்டதாரி, அனேகன், ஹிந்தியில் ஷமித்தாப் என தொடர் வெற்றிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் “மாரி”. காதலில் சொதப்புவது எப்படி மற்றும் வாயை மூடி பேசவும் படங்களின் இயக்குநர் பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
தனுஷ் – காஜல் அகர்வால் முதல் முறையாக இணையும் இப்படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனுஷின் மாரி தோற்றம் – மாரி மீசை, மாரி கண்ணாடி என ஏற்கனவே பரவலாக கொண்டாடப்படுகிறது.
Poetu தனுஷ், விக்னேஷ் சிவன், ரோகேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
முதல்முறையாக பாலாஜி மோகன், Rockstar இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருடன் இணைந்துள்ளார். அது மட்டுமின்றி அனிருத், ஒரு பாடல் காட்சியில் தனுஷுடன் நடனமாடியுள்ளார். அனைத்து பாடல்களுக்கும் பாபா பாஸ்கர் நடனம் அமைத்துள்ளார்.
பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாஸ், நடிப்பில் முதல் முறையாகவும், ஒரு முக்கிய போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். கோலி சோடா புகழ் விஜய்முருகன் இப்படத்தின் கலை இயக்குநர். பிரசன்னா ஜி.கே எடிட்டரின் முதல் படம். இவர் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களிடம் அசோசியேட்டாக பணியாற்றியவர். கொச்சியில் உள்ள டிஜிட்டல் பிரிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை செய்து வருகிறது. லியோ விஷன்ஸ் – சுரேன் ஜி மற்றும் அழகியகூத்தன் ஒலி வடிவமைப்பாளர்கள். புகைப்படங்கள் – அமீர், இப்படத்தின் மக்கள் தொடர்பாக ரியாஸ் கே. அகமத். நிர்வாகத் தயாரிப்பு – S.வினோத்.
இப்படத்தின் ஷூட்டிங் நவம்பர் 2014ல் தொடங்கி, ஒட்டுமொத்த படப்பிடிப்பு 57 நாட்களில் முடிவடைந்தது. ஜூன் 7ஆம் தேதி 2015 அன்று ‘தர லோக்கல்’ பாடல்கள் சோனி மியூசிக் நிறுவனம் மூலம் வெளியாகியுள்ளது. பாடல்கள் அனைத்தும் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. டீஸர் மற்றும் ட்ரெய்லர் யு-ட்யூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 3 மில்லியனுக்கு மேல் மக்கள் பார்த்து, அமோக வரவேற்பை பெற்றது.
ரசிகர்கள் விதவிதமான வகையில் (Batman, Joker, Jack Sparrow (Johnny Deep), Tom Cruise, Hulk, Iron Man, Super Star’s Padaiyappa, Annamalai, Ms Dhoni, Sachin Tendulker, Ilaiyathalapathy Vijay, Ajith, Vijayakanth, Vijay Sathupathi Etc,.) மாரி டீஸர் மற்றும் ட்ரெய்லரை பதிவு செய்துள்ளனர்.
இது தவிர மாரி டூன் ‘டீ சர்ட்ஸ்’ டிசைன்ஸ் செய்துள்ளனர். தணிக்கைக்குழு இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியது. தொடக்கம் முதல் இறுதி டைட்டில்ஸ் வரை 2 மணி 18 நிமிடம். ஜூலை 17 2015 அன்று மாரி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் – ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் (பி) லிட் இணைந்து தயாரித்துள்ளது.