புரட்சித் தலைவரின் பட டைட்டிலில் சண்முகப் பாண்டியன்! – பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்

Get real time updates directly on you device, subscribe now.

டிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப்பாண்டிய கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மதுர வீரன்’.

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கேப்டன் விஜயகாந்த் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜயகாந்த், ”வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய மகன் சண்முக பாண்டியன் நடித்த படம் என்பதால் அவரை பற்றி நான் நிறைய பேச விரும்பவில்லை. என் மகனை பற்றி யாராவது குறை கூறியிருந்தால் அதற்கு நான் விளக்கம் கொடுத்து பேசி இருக்கலாம்.

ஆனால் எல்லோரும் சண்முக பாண்டியன் உயரமாக உள்ளார். அவரிடம் நாங்கள் அன்னார்ந்து பார்த்து தான் பேச வேண்டி இருந்தது என்று தான் சொல்கிறார்கள். என்னுடைய மனைவி படத்தின் தயாரிப்பாளர் சுப்பு அவர்களை பற்றி நிறைய கூறியுள்ளார். இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உருவாக்கியுள்ள இப்படத்துக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்து பேசிய திருமதி. பிரேமலதா விஜயகாந்த், ”மதுர வீரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடை தான் நான் முதல் முறையாக பேசும் சினிமா மேடை. நான் தான் இப்படத்தின் கதையை முதலில் இயக்குநர் முத்தையாவிடம் கேட்டேன். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. கதையை பற்றி நான் கேப்டனிடம் கூறியதும் இந்த கதையை உடனடியாக கேட்க வேண்டும் என்று கூறினார்.

Related Posts
1 of 8

அதற்கு காரணம் படத்தில் ஜல்லிக்கட்டு பற்றி கதை என்பதால் தான். ஜல்லிக்கட்டு நம்முடைய கலாச்சாரம். இந்த காலத்து இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக தான் முதன் முறையாக ஒன்றாக கை கோர்த்து போராடினார்கள். அதனால் இந்த கதை கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறினார் கேப்டன். கேப்டன் விஜயகாந்த் ”மதுர சூரன்” என்ற படத்தில் நடித்தார்.

மதுர வீரன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் டைட்டில். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் டைட்டிலில் என்னுடைய மகன் நடிப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது. கேட்டவுடன் மெய் சிலிர்க்கும் வகையில் அனைத்து பாடல்களும் அமைந்துள்ளது தனி சிறப்பு என்றார் திருமதி. பிரேமலதா விஜயகாந்த்.

”மதுர வீரன்” திரைப்படத்தில் இடம்பெற்ற ”என்ன நடக்குது நாட்டுல” பாடலை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க என்று அனைத்துக் கட்சிகார்களும் பிரச்சாரத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். இப்பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றதுக்கு முக்கிய காரணம் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி தான். அவருடைய இசையும், யுகபாரதியின் வரிகளும் பாடலை சிறப்பாக கொண்டு வந்துள்ளது என்றார் எல்.கே சுதீஷ்.

விழாவில் திருமதி. பிரேமலதா விஜயகாந்த், எல்.கே சுதீஷ், இயக்குநர் வெங்கட்பிரபு, படத்தின் தயாரிப்பாளர் சுப்பு நாராயணன், இயக்குநர்- ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா, கவிஞர் யுகபாரதி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் தம்பி ராமையா, நாயகி மீனாட்சி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.