மகுடம்- விமர்சனம்
“தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்…தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்” தமிழ்ல இந்த பழமொழி ரொம்ப பேமஸு. இது இன்னைக்கு சினிமாவில நம்ம விஷாலுக்குப் பொருந்திருக்கு. சரி மெல்லமா மகுடம் கதை என்னன்னு பார்ப்போம்
வைசாக்ல இருக்கார் அப்பா விஷால்..லோக்கல்ல இருக்கார் மகன் விஷால். மகன் விஷால் கஷ்டப்பட்டு ஒரு கார் வாங்குகிறார். வாங்குன கார்ல மனைவி துஷாரா மற்றும் மகன் மகளுடன் செல்கிறார். அப்போது ஒரு விபத்து. அந்த விபத்தில் விஷாலின் மனைவியும் மகளும் உயிரிழக்க விஷாலும் அவரின் மகனும் உயிர் பிழைக்கிறார்கள். இந்த விபத்தை ஏற்படுத்தியதே கேடியான என் டாடி தான் என முடிவுக்கு வருகிறார் மகன் விஷால். ‘அதான் இல்ல’ என வேறோர் கதை சொல்கிறார் அப்பா விஷால். அப்பா மகனின் கதையோடு அப்பாவும் மகனும் இன்னும் சிலரின் (ஆடியன்ஸ் உள்பட) கதையை முடிக்க.. படம் க்ளைமாக்ஸை எட்டுகிறது
“நடிப்பதற்குன்னா வேறாளப்பாரு. அடிப்பதுக்குன்னா மட்டும் இக்கட சூடு” என்ற முடிவோடு களமிறங்கியுள்ளார் விஷால். மனிதர் பொறிகலங்க சண்டையிடுகிறார். நடிகர் விஷால் இயக்குநர் விஷால்கிட்டயும் சண்டை போட்டிருக்கலாம் பச்! அப்புறம் துஷாரா விஜயன், அஞ்சலி, தம்பிராமையா, ஜான் விஜய், பதம் குமார் உள்ளிட்ட இன்னும் சிலபல ஸ்டண்ட் யூனியன் ஆட்கள் என அனைவரும் நடித்துத் தள்ளியுள்ளனர். அதிலும் தம்பி ராமையாவின் அலம்பல் இருக்கே.. ஸ்ஸப்பா

ஜிவி பிரகாஷின் இசையில் சம்பளம் வாங்கமுடியாத ஒரு தொழிலாளியின் வேதனை தெரிகிறது. ரிச்சர்ட் எம்.நாதன், அபி என இரு கேமராமேன்கள் படத்திற்கு. போதாக்குறைக்கு விஷாலும் கேமராவைப் பிடித்து ஆட்டியுள்ளார் போல.
கதை என்ற ஒன்றே இல்லை அதனால் திரைக்கதை எதற்கு என்ற முடிவுக்கு வந்துள்ளார் விஷால். ஆல்ரெடி நகராத திரைக்கதைக்கு மொக்க ஸ்பீட் பிரேக்கர்ஸ் வேறு. படத்தின் நீளம் 3 மணிநேரம் என்பது இன்னும் கொடுமை
மகுடம்- சூடுவதற்கு வாய்ப்பேயில்லை ராசா
2/5