‘மீ டூ’வெல்லாம் ஒரு ஃபேஷன் – மோகன்லால் செம நக்கல்

Get real time updates directly on you device, subscribe now.

ரு பக்கம் பெண்களை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் கவசமாக ‘மீ டூ’ இயக்கம் சொல்லப்பட்டாலும் இன்னொரு பக்கம் அது ஆண்களுக்கு எதிராக பெண்கள் கையிலெடுக்கும் ஆதாரமில்லா ஆயுதம் என்றும் கடும் எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக மீ டூ என்ற பெயரில் பல பிரபலங்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை பொதுவெளியில் துணிச்சலோடு சொல்லி வருகிறார்கள். இன்னொரு பக்கம் அப்படி சொல்லப்படும் செய்திகளில் பல பொய்யாகவும் இருக்கிறது.

இதனால் மீ டூ க்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பே வருகிறது. இதனால் மீ டூ வை எதிர்ப்பவர்களை அதனை ஆதரிப்பவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Related Posts
1 of 3

அப்படித்தான் மீ டூ பற்றி கருத்து தெரிவித்திருக்கும் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் ”மலையாள திரையுலகில் எந்த பெரிய பிரச்சனையும் இல்லை. மீ டூவை ஒரு இயக்கமாக பார்க்கக் கூடாது. அது வந்த வேகத்தில் மறைந்து விடும். மீ டூ என்பது தற்போது ஃபேஷனாகி விட்டது. இது போன்ற விஷயங்களின் ஆயுட்காலம் மிக மிக குறைவு. பாலியல் தொல்லை படங்களில் மட்டும் அல்ல எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று நக்கலாக தெரிவித்திருக்கிறார்.

அவரின் இந்தக் கருத்தைக் கேட்ட நடிகை பத்மப்ரியா, ”மோகன்லால் பெண்களுக்கு குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, இப்படிப்பட்ட கருத்துகளை வெளியிட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.