விஷ்ணு விஷாலுடன் அமலாபால் ஜோடி சேரும் ”மின்மினி”

Get real time updates directly on you device, subscribe now.

minmini

‘முண்டாசுப்பட்டி’ படத்திற்கு பிறகு இயக்குநர் ராமும், விஷாலும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

அமலாபால் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தற்போது ‘மின்மினி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி டில்லிபாபு தயாரிக்கும் ‘மின்மினி’ படம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி. வி ஷங்கர், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஏ கோபி ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஏ கீர்த்தி வாசன் என பல திறமையான தொழில்நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. ‘மின்மினி’ படத்தின் தயாரிப்பில் ‘ஸ்கைலார்க் மீடியா’ ஸ்ரீதர் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

Related Posts
1 of 13

“எங்கள் மின்மினி படத்தின் தலைப்பை அறிவித்த அடுத்த கணமே ரசிகர்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது. மிக கவனமாக நாங்கள் தேர்ந்தெடுத்த ‘மின்மினி’ தலைப்பு, படத்திற்கு கன கச்சிதமாக பொருந்தியுள்ளது என்று ரசிகர்கள் படத்தை பார்த்த பின்பு கூறுவார்கள்.

சைக்கோ – திரில்லர் பாணியில் உருவாகி வரும் எங்கள் ‘மின்மினி’ படத்தின் டீசரை நாங்கள் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் ராம்.