குழந்தைகள் அன்பில் நெகிழ்ந்து போன எஸ்.ஜே.சூர்யா
‘மான்ஸ்டர்’ படம் மிகப்பெரிய ஹிட் படமாகியிருப்பதில் ரொம்பவே உற்சாகமாக காணப்படுகிறார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.
அந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய அவருடைய பேச்சிலிருந்து அந்த உற்சாகத்தை நேரில் பார்க்க முடிந்தது. சந்திப்பில் அவர் தொடர்ந்து பேசியதாவது,
முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. ஹீரோ யார் என்று தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் இந்த காலத்தில், மக்கள் கதைக்காக படம் பார்க்க வருகிறார்கள். இப்படத்தில் கதை தான் நாயகன்.
எல்லா தியேட்டர்களுக்கும் நேரில் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.
இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.
‘பாகுபலி’க்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குநர்.
இப்படம் மூலம் என்னை உயரத்திற்கு கொண்டு வந்ததற்கு நெல்சனுக்கும், பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸுக்கும் நன்றி. இசையும் நன்றாக உதவி புரிந்திருக்கிறது. இதே குழுவுடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்” என்றார் எஸ்.ஜே.சூர்யா.