நானே வருவேன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

செல்வராகவன் தனுஷ் காம்போ என்றால் நிச்சயமாக அப்படம் மறக்க முடியாத படமாக இருக்கும். காதல்கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, என செல்வா தனுஷ் காம்போ தமிழ்சினிமாவின் மைல்ஸ்டோன். அந்த வரிசையில் நானே வருவேன் படம் அமைந்திருக்கிறதா?

ஒரே தோற்றத்தில் பிறக்கும் இரு தனுஷ்களில் ஒருவர் சைக்கோவாக மாறுகிறார். ஒருவர் பக்கா பேமிலி மேனாக இருக்கிறார். 12 வயது மகளை வளர்த்து வரும் நார்மல் தனுஷின் வாழ்க்கையில் ஒரு பேய் வருகிறது. அதன் கதை என்ன? சைக்கோ கில்லர் தனுஷின் முடிவு என்ன? என்பது தான் படத்தின் கதை

எந்தப்பாத்திரம் ஏற்றாலும் அதை நிறைத்து வழியச் செய்வதில் தனுஷ் வல்லவர். இப்படத்திலும் தான் ஏற்ற இரண்டு கேரக்டர்களையும் அதகளப்படுத்தி ஸ்ட்ராங்காக நிறுத்தியிருக்கிறார். தனுஷைத் தவிர்த்து வேறு யாரும் பெரிதாக கவனப்படவில்லை..இயக்குநரின் பேனாவும் அதற்கு முயற்சி எடுக்கவில்லை

Related Posts
1 of 3

படத்தின் ஆகப்பெரும் பலங்களில் முதல் பலம் யுவனின் பின்னணி இசை. ஒவ்வொரு காட்சிக்கான வீரியத்தையும் அவரது பின்னணி இசை பக்காவாக கூட்டுகிறது. வெல்டன் யுவன். ஒளிப்பதிவும் படத்தின் தரத்தை கூட்டியிருக்கிறது. வீடு காடு என ஒளிப்பதிவாளர் எதைக்காட்டினாலும் அதில் ஓர் அழகியல் கொட்டுகிறது

ஒரு புதிர் அதை நோக்கிய பயணம், பயணத்தில் வரும் அதிரடி திருப்பங்கள் என படம் முதல்பாதி அழகாக நகர்கிறது. இரண்டாம் பாதியை நகர்த்த செல்வராகவன் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். பல சமரசங்களை கலந்து கொடுத்துள்ள இரண்டாம் பாதி படத்தின் பெரிய மைனஸ் என்றாலும் ஒருமுறை பார்க்கலாம் என்ற கேட்டகிரிக்குள் நானே வருவேன் அடங்குகிறது

3/5

#NaaneVaruvean #நானே வருவேன்