நித்தம் ஒரு வானம்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

கதைகளைப் படிக்கும் ஹீரோ அந்தக் கதைகளின் கேரக்டராக மாறினால்? இதுதான் நித்தம் ஒரு வானம் படத்தின் ஆதார விதை

நாயகன் அசோக்செல்வன் கொல்கத்தா செல்வதற்காக ஓரிடத்தில் நிற்கிறார். அங்கு அவரோடு ரிதுவர்மா வந்து சேர்கிறார்..தான் எதற்கு கொல்கத்தா செல்லவிருக்கிறேன் என்ற கதையை வேறுவழியில்லாமல் ரிதுவர்மாவிடம் சொல்கிறார் அசோக்செல்வன். அந்தக் கதை என்ன? அசோக்செல்வன் கேரக்டர்களாக மாறிய இரண்டு கதைகளின் முடிவு என்ன? என்பதே நித்தம் ஒருவானம் படத்தின் கதை

அசோக்செல்வன் படத்திற்கு படம் தன்னை நன்றாக நிலைநிறுத்தி வருகிறார். அவரது கதை தேர்வுகள் போலவே அவரது நடிப்பும் பாராட்டும்படி இருக்கிறது. நாயகி ரிதுவர்மா இளைஞர்களை அழகாலும், வயதான இளைஞர்களை நடிப்பாலும் கவர்கிறார். ஷிவாத்மிகா, அபர்ணா பாலமுரளி, காளிவெங்கட், அழகம் பெருமாள் உள்ளிட்ட அனைவரும் சிறந்த நடிப்புக்கான சான்றாக இருக்கிறார்கள்

தரண்குமார் பின்னணி இசையையும், கோபி சுந்தர் பாடல்களுக்கான இசையையும் அமைத்திருக்கிறார்கள். இருவரும் சிறப்பாகவே உழைத்துள்ளார்கள். விது அய்யன்னாவின் கேமரா முன்பாதியில் ஒரு பரிணாமத்தையும், பின்பாதியில் வேறோர் பரிணாமத்தையும் காட்டி சிறப்பு செய்திருக்கிறது.
எடிட்டர் அந்தோணி தேவையான புட்டேஜை சரியாக கோர்த்திருக்கிறார்

பின்பாதியில் மிகவும் தேவையான விசயத்தைப் பேசும் படம் முன்பாதியில் நம்மோடு கனெக்ட் ஆகாமல் தடுமாறுகிறது. ஒருசில காட்சிகளை நாம் யூகிக்க முடிவதும் திரைக்கதையின் சின்ன பலவீனம். ஹீரோ அசோக்செல்வன் முன் வைக்கும் அவரது பிரச்சனையிலும் சிறு குழப்பம் இருக்கிறது. ஆனாலும் இப்படியான குறைகளை விஞ்சி நிற்கின்றன படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியும் வசனங்களும். வானத்தில் எல்லா நட்சத்திரங்களும் ஒரேப்போல் தெரிந்தாலும் அவைகளுக்குள் வேறுபாடுகள் இருக்கும் தான். வேறுபாடுகளை உடன்பாடாக்கிக் கொண்டதால் வானம் அழகாக இருக்கிறது. அதையே நாமும் செய்தால் வாழ்வும் அழகாக இருக்கும் எனச் சொல்லும் நித்தம் ஒரு வானத்தை ஒருமுறை பார்க்கலாம்

3/5
#NithamOruVaanam #நித்தம்ஒருவானம்