எனக்கு எதுக்குங்க அந்த ஆசையெல்லாம்? : உஷாரான சூரி

Get real time updates directly on you device, subscribe now.

soori

ஜன் கணக்கில் படங்களில் நடித்து செழிக்க செழிக்க கைகளில் பணத்தை பார்த்த பிறகு, காமெடி நடிகர்களுக்கும் அடுத்த லெவலான ஹீரோ ஆசை லேசாக தலை தூக்க ஆரம்பித்து விடுகிறது.

இதனால் வடிவேலு, விவேக், சந்தானம் என அடுத்தடுத்த காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். காலியாகியிருக்கும் அந்த இடத்தை கடந்த சில வருடங்களாகவே நிரப்பி அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து பிஸியாக இருப்பவர் ‘பரோட்டா’ சூரி.

இன்றைய தேதி வரை அவருடைய வண்டி எந்த தடங்களும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவரை சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ”நீங்களும் ஹீரோவா நடிச்சா நல்லாயிருக்குமே..?” என்று ஆசை வார்த்தை கூறி அழைக்க ஆரம்பிக்க அதைக்கேட்டு உஷாராகி விட்டாராம் சூரி.

Related Posts
1 of 7

”எனக்கு எதுக்குங்க அந்த ஆசையெல்லாம்? எனக்கு எது செட்டாகுதோ? அதை செஞ்சிட்டு போறேன்.”என்று  கையெடுத்து கும்பிட்டு நழுவி விட்டாராம்.

ஹீரோவான காமெடியன்களோட லேட்டஸ்ட் கண்டிஷனெல்லாம் அவருக்கு தெரியாதா என்ன?

நல்ல முடிவெடுத்தீங்க சூரி ஜி…