லாபத்தை ஈட்டித் தருவான் ‘பிச்சைக்காரன்’ : விநியோகஸ்தர் நம்பிக்கை

தொடர்ந்து நல்ல கதையம்சமுள்ள வெற்றிப் படங்களை தந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படத்துக்கும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது.
நல்ல கதையம்சம் உள்ள படம் என திரையுலகில் நல்லதொரு பேச்சும் நிலவி வருவதால் ’பிச்சைக்காரன்’ படத்தின் விநியோக உரிமையை பல்வேறு படங்களை வாங்கி விநியோகிக்கும் கே ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தினர் வாங்கி உள்ளனர்.
படத்தை வாங்கிய பெருமிதத்துடன் கேஆர் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சரவணன் கூறுகையில் ‘ஒரு விநியோகஸ்தராக நான் விஜய் அண்டனியின் வளர்ச்சியை கூர்ந்துக் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். அவரது கதை தேர்வு, தன்னுடைய பலம் அறிந்து செயல்படும் திறன், திறமையான இயக்குனர்களுடன் பயணிப்பது என்று திட்டமிட்டு செயல்படுகிறார். இந்த திட்டமிடுதலும், சீரிய முயற்சியும் அவரது தொடர் வெற்றிக்கு மூலக்காரணமாகும்.
‘பிச்சைக்காரன்” படத்தில் அவர் இயக்குனர் சசியுடன் பயணித்து இருப்பது அவரை இன்னமும் உச்சத்துக்குக் கொண்டு செல்லும்.இந்தக் கூட்டணி ரசிகர்களின் ரசனைக்கேற்றப் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வர்த்தக ரீதியாகவும் ‘பிச்சைக்காரன்’ மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மாத இறுதியில் ‘பிச்சைக்காரன்’ படம் வெளிவர இருக்கிறது. ‘பிச்சைகாரன் ‘படத்தின் பாடல்கள் படத்துக்கு மிக பெரிய பலம் எனலாம்.
2016 இன் துவக்கத்தில் வெளி வரும் இந்தப்படம் எல்லோருக்கும் லாபம் ஈட்டி தரும் படமாகும்’ என்றுக் கூறினார்.