ரிலீஸ் தேதியும் நெருங்குது; எதிர்பார்ப்பும் கூடுது : 350 தியேட்டர்களில் பிச்சைக்காரன் ரிலீஸ்

Get real time updates directly on you device, subscribe now.

piccai

 ‘நான்’, ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’ என தனது படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ்சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி.

வ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையானால் குறைந்தது நான்கு படங்களாவது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதனால் தியேட்டர் கிடைப்பதில் மிகப்பெரிய சிக்கல் நீடிக்கிறது.

இப்படியான சூழலில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படம் பெரிய விலைக்கு பிசினஸ் ஆகி இருக்கிறது.

அதுமட்டுமல்ல, ‘பிச்சைக்காரன்’ படத்தை மொத்தமாக வாங்கிய கே.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் அனைத்து ஏரியாக்களையும் வெற்றிகரமாக வியாபாரமும் செய்து முடித்திருக்கிறது.

Related Posts
1 of 14

‘பிச்சைக்காரன்’ படத்தின் இயக்குநரான சசியும் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி வருபவர். இருவரும் இணைந்துள்ள படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. போதாக்குறைக்கு இப்படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. அண்மையில் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட ‘பிச்சைக்காரன்’ படத்துக்கு சென்சாரில் கிடைத்தது – ‘யு’ சான்றிதழ்.

‘யு’ கிடைத்தால் வரிவிலக்கு என்ற பெயரில் உபரி லாபமும் கிடைக்கும் என்பதால் ‘பிச்சைக்காரன்’ படத்தை திரையிட தியேட்டர்ககள் மத்தியில் ஆர்வ அலைமோதல். இதுவரை 350 தியேட்டர்கள் இறுதி செய்யப்பட்டுள்ள ‘பிச்சைக்காரன்’ மார்ச் மாதம் 4-ஆம் தேதி வெளிவர உள்ளது.

‘தமிழ் திரை உலகத்துக்கு இது நல்ல வேளை என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல தரமான கதையம்சம் உள்ள படங்கள் வெளிவருவதும், வெற்றி பெறுவதும் எங்களைப் போன்ற விநியோகஸ்தர்களுக்கு ஊக்கம் தருகிறது. அந்த ஊக்கமே ‘பிச்சைக்காரன்’ போன்ற தரமான கதை உள்ள படமும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையையும் தருகிறது. ரசிகர்கள் இடையேயும், திரையரங்கு உரிமையாளர்கள் இடையேயும் இன்று விஜய் ஆண்டனிக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பு அவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

இயக்குனர் சசிக்கு ரசிகர்கள் இடையே இருக்கும் கண்ணியமான வரவேற்பு மிகப்பெரியது. ‘பிச்சைக்காரன்’ அதை இரட்டிப்பு செய்யும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

எங்களது நிறுவனமான கே ஆர் பிலிம்ஸ் மற்றும் எங்களுடன் இணைந்து இந்தப் படத்தை வெளியிடும் ஸ்கை லார்க் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினருக்கும் ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் வெற்றி மூலம் பெரும் மதிப்பு கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்கிறார் கே ஆர் பிலிம்ஸ் சரவணன்.