பிரபாஸ் – அனுஷ்கா திருமணம் : இன்னும்மாய்யா உங்க பஞ்சாயத்து தீரல..?

Get real time updates directly on you device, subscribe now.

anuhska1

‘பாகுபலி’யின் பிரம்மாண்ட வெற்றி உலகம் முழுக்க அப்படத்தின் ஹீரோ பிரபாஸை பிரபலமாக்கி விட்டது.

இதனால் புதுப்பட வாய்ப்புகளும், பெரிய பெரிய நிறுவனங்களின் விளம்பர வாய்ப்புகளும் அவரை விடாமல் துரத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால் பிரபாஸோ ‘பாகுபலி2’ படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அந்தப்படம் முடிந்து ரிலீசான பிறகு தான் தனது திருமணத்துக்கே வீட்டில் சம்மதம் சொல்லியிருக்கிறார்.

அந்தளவுக்கு ‘சின்சியர் சிகாமணி’யாக இருக்கும் பிரபாஸின் திருமணத்தைப் பற்றி சென்றவாரம் முழுவதும் சர்ச்சையான செய்தி கிளம்பியது.

அதுவும் அவருடன் தொடர்ந்து ஐந்து படங்களில் இணைந்து நடித்த அனுஷ்காவைத் தான் திருமணம் செய்கிறார் என்பதுதான் அந்த சர்ச்சையைக் கிளப்பிய அதிர்ச்சி.

Related Posts
1 of 18

பின்னர் இருவருமே ”எங்களுக்குள் எந்த தப்பான உறவும் இல்லை. நாங்க நல்ல ப்ரெண்ட்ஸ் அம்புட்டுத்தான்” என்று தனித்தனியாக விளக்கம் கொடுத்தார்கள்.

அதோடு பஞ்சாயத்து தீர்ந்தது என்று பார்த்தால் இப்போது இன்னொரு நடிகை மூலம் பிரபாஸின் திருமணச் செய்தி சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

பிரபாஸின் திருமணம் குறித்து விளக்கமளித்த அவரது மாமனார் ”பிரபாஸுக்கு எங்கள் சொந்தத்திலேயே பெண் பார்த்தாகி விட்டது. அவர் படித்துக் கொண்டிருக்கிறார். படிப்பு முடியவும் அவரை பிரபாஸுக்கு திருமணம் செய்து வைப்போம்” என்றார்.

அவர் சொல்லி முடிக்கவும் பிரபாஸ் திருமணம் செய்யப்போகும் அந்தப் பெண் இவர் தான் என்று யாரோ சில விஷமம் பிடித்தவர்கள் ஒரு பெண்ணின் போட்டோவை பரப்பி விட்டு விட்டார்கள்.

கடைசியில் பார்த்தால் அவரும் பிரியா லால் என்கிற நடிகையாம்.  அவர் ரசிகர்களிடையே பிரபலமாகாதவர் என்பதால் யாருக்கும் அவரை சரியாக அடையாளம் தெரியவில்லை.

இப்போது பிரபாஸ் திருமணம் செய்யப்போகும் பெண் இவரும் இல்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறது பிரபாஸ் தரப்பு.

இன்னும்மாய்யா உங்க பஞ்சாயத்து தீரல..?