திறமைசாலிங்களே ஓடியாங்க… : தயாரிப்பாளர் ஆகிறார் பிரபுதேவா

Get real time updates directly on you device, subscribe now.

prabhu-deva

டனம், நடிப்பு மற்றும் இயக்கம் என தனது ஒவ்வொரு அசைவிலும் வெற்றியைக் கண்டுவரும் பிரபுதேவா தயாரிப்பாளராகியிருக்கிறார்.

தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘Prabhu Deva Studios’ என பெயர் வைத்துள்ளார் பிரபுதேவா. தனது நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப் போகும் படங்களை பற்றிய அறிவிப்பை நாளை மறுநாள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி அறிவிக்க உள்ளனர்.

Related Posts
1 of 6

“சர்வதேச தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மற்றமொழி திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம்.

தமிழ்த்திரை உலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை. தேர்ந்த, அனுபவமுடைய பலரை கொண்டிருக்கிறது. திறன் வாய்ந்த கலைஞர்கள், படைப்பாளிகள் மொழி, பிராந்தியம் என குறுகிய வட்டத்தில் சிக்கி கொள்ளக்கூடாது அவர்கள் நாடெங்கும் சென்று தங்களது திறமையை வெளி காட்ட வேண்டும். நல்ல படைப்பாளிகளை தேர்ந்தெடுத்து வெவ்வேறு இடங்களுக்கு அவர்களை கொண்டு செல்வதில் என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் பிரபுதேவா.