தமிழ்த் திரையுலகின் பொக்கிஷம் விக்ரம்! – நடிகர் பிரபு புகழாரம்

Get real time updates directly on you device, subscribe now.

‘சாமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறது விக்ரம் – ஹரி வெற்றிக் கூட்டணி!

‘இருமுகன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் பிரபு பேசுகையில், ‘அப்பாவுடன் சிறிய வயதில் இருந்தே நான் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்ற தேடல் இருப்பதை கவனித்திருக்கிறேன்.

Related Posts
1 of 20

உடலை ஏற்றுவார். இறக்குவார். குரலை மாற்றுவார். அதேபோல் கமல்ஹாசனிடத்திலும் அந்த ஆர்வம் இருப்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன். அந்த பாதையில் என்னுடைய அருமைத்தம்பி சீயான் விக்ரமும் பயணிக்கிறார்.

அவருடன் ‘ராவணா’, ‘கந்தசாமி’ அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் நடிக்கும்போது நான் உணர்ந்த ஒரு விஷயம் என்னவெனில், அவர் நம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்.’ என்றார்.