‘என்னை மாதிரியே ட்ரெஸ் போட்டு கிண்டல் பண்றியா?’ : இளையராஜாவிடம் டோஸ் வாங்கிய பிரேம்ஜி

Get real time updates directly on you device, subscribe now.

premji

‘என்னமோ நடக்குது’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் வி.வினோத்குமார் மீண்டும் அப்படத்தின் இயக்குநர் ராஜபாண்டியுடன் அச்சமின்றி படத்தில் இணைந்திருக்கிறார்.

நாயகன் அதே படத்தில் நடித்த விஜய் வசந்த். அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்க இவர்களுடன் சமுத்திரக்கனி, ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. படத்துக்கு இயக்குநர் வெங்கட்பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜி தான் இசையமைப்பாளர்.

நிகழ்ச்சியில் பேசிய அவர் இளையராஜா குறித்துப் பேசியது விழாவில் கலகலப்புக்கு கேரண்டியாக அமைந்தது…

விழாவில் அவர் பேசியதாவது :

”விஜய் வசந்த் ஹீரோவாகவும், வினோத்குமார் தயாரிப்பாளராகவும் ஒரு படம் எடுக்க போகிறோம் என்று சொல்லும் போதே நான் தான் அந்த படத்திற்கு இசையமைப்பேன் என்று சொல்லி விட்டேன். அவர்களும் ஒத்துக் கொண்டார்கள்.

Related Posts
1 of 17

அவர்கள் எடுத்த இரண்டு படத்திற்கும் நான் தான் இசையமைத்தேன். இனி அவர்கள் எடுக்க போகும் படங்களுக்கும் நான் தான் இசையமைப்பேன். இது எங்களுக்குள் வாய் வார்த்தையில் போட்டுக் கொண்ட ஒப்பந்தம். என்னுடைய இசையில் வெளிவந்த பாடல்களை நான் காப்பியடித்து போட்டிருக்கிறேன் என்று பலர் பேசிக் கொன்டிருக்கிறார்கள்.

achamindri

ஆமாம் நான் காப்பியடித்து தான் போட்டுக்கொண்டு கொண்டிருக்கிறேன். எனது பெரியப்பா (இளையராஜா) இசையமைத்த பாடல்களை தான் மாற்றி போட்டுக் கொண்டிருக்கிறேன். வேறு யாருடைய இசையில் வெளிவந்த பாடல்களை நான் திருடவில்லை.

எங்கள் குடும்ப சொத்தான (இளையராஜா) இசையிலிருந்து தான் திருடிப் போடுகிறேன். எல்லோருமே அவருடைய இசையிலிருந்து தான் மாற்றி பாடல்களை போடுகிறார்கள் நான் எடுத்து போடக் கூடாதா?

என்னிடம் இயக்குனர்கள் நீங்கள் இளையராஜா போன்று இனிமையான ட்யூன் போட்டு தர வேண்டும் என்று கேட்பார்கள். நான் வரைப் போன்று டியூன் போட முடியாது. அவரைப் போன்று டிரெஸ் மட்டும் தான் போட்டுக் காட்ட முடியும். சொன்னபடி ஒருநாள் வெள்ளை ஜிப்பா, வேஷ்டி போட்டுக்கொண்டு ருத்ராட்ச மாலைகளையும் மாற்றிக்கொண்டு ஆர்மோனியப் பெட்டியுடன் போஸ் கொடுத்தேன்.

அதை போஸ்டர் அடித்து எல்லா இடங்களிலும் ஒட்டினார்கள். பெரியப்பா வீட்டு வாசலிலும் ஒட்டி விட்டார்கள். பெரியப்பா கூப்பிட்டு பேசினார்.. என்னடா என்னை போல் டிரெஸ் போட்டு கிண்டல் பன்றியா? என்று கேட்டார். அதற்கு நான் இல்லை பெரியப்பா உங்களைப் போல இசையமைக்க சொன்னார்கள் அது என்னால் முடியாது, வேண்டுமானால் அவரைப் போல டிரெஸ் போட்டு போஸ் கொடுக்கிறேன் என்று சொன்னேன். அதைதான் போஸ்டர் போட்டு ஒட்டி விட்டார்கள்” என்று சொன்னேன்” என்றார் பிரேம்ஜி.