தனுஷ் கேட்டிருந்தால் ரஜினி சாரே கொடுத்திருப்பார்! : ராஜ்கிரண் பெருமிதம்

Get real time updates directly on you device, subscribe now.

rajkiran1

ஹீரோவாக பல வெற்றிகளைப் பார்த்து விட்ட நடிகர் தனுஷ் இயக்குநராக களமிறங்கியிருக்கும் படம் தான் ‘பவர்பாண்டி’.

‘பவர் பாண்டி’ தற்போது ‘ப. பாண்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Posts
1 of 37

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ராஜ்கிரண். இவருடன் நடிகை ரேவதி, பிரசன்னா, சாயா சிங், செண்ட்ராயன் உள்பட பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜ்கிரண் பேசியதாவது “கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ், என்னுடைய மருமகன். 27 வருடத்திற்கு முன் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.

இன்று மீண்டும் அவரது மகன் மற்றும் என் இயக்குனர் தனுஷ் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். தனுஷ் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டிருந்தால் ரஜினியே கொடுத்திருப்பார். ஆனால் அவர் என்னை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அது அவருடைய தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. அதை நான் இப்படத்தில் வேலை செய்தபோது ஒவ்வொரு நொடியும் உணர்ந்தேன்.

இத்தனை வருட காலம் இருந்த ராஜ்கிரணை முற்றிலும் மாற்றி புதிய ராஜ்கிரனை காட்டியுள்ளார். இந்தக் குழுவில் எல்லோருமே எனக்கு பிள்ளைகள் தான். என் பிள்ளை பிரசன்னா சொன்ன மாதிரி நான் புதிதாக நடிக்க வந்தவனை போல கேட்டுக் கொண்டிருந்தேன். என்பது பிரச்சன்னாவின் பார்வை. உண்மை அதுதான். ஏனென்றால் மருமகன் தனுஷ் எனக்கு விளக்கிய விதத்தில் என்னை அறியாமல் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. இப்படியொரு கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு தனுஷிற்கும் என்னுடன் இணைந்து பணியாற்றிய என் குடும்பத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ராஜ்கிரண்.