ராக்கெட்ரி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

1994-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உலகமே பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விசயம், ஒரு வழக்கும் கைதும் தான். அந்த வழக்கு பாகிஸ்தானுக்கு கிரையோஜெனிக் என்ஜினின் ரகசியங்களை ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் விற்றார் என்பது தான். அதற்காக அவரை தடாலடி கைதும் செய்தார்கள். பின் அத்தனையும் புருடா என அவரை விடுதலையும் செய்தார்கள். இந்தச் சம்பவத்தை அப்படியே நம்பி நாராயணனின் பெர்சனல் வாழ்வோடு கலந்து படமாக்கியிருக்கிறார் நடிகர் மாதவன்

நடிகராக மாதவன் இந்தப்படத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளார். ஒரு விஞ்ஞானியின் உடல்மொழியை தனக்குள் வார்த்து வாழ்ந்திருக்கிறார். அவரின் மனைவியாக வரும் சிம்ரன் கனகச்சிதம். படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது. அனைவருமே நடிப்பில் நிறைவைக் கொடுத்திருக்கிறார்கள்

Related Posts
1 of 2

ராக்கெட்ரியை உயரப்பறக்க வைக்கும் இன்னொரு அம்சம் சாம்.சி எஸ்ஸின் பின்னணி இசை. படத்தின் ஒளிப்பதிவாளர் படத்தின் தரத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் சென்றிருக்கிறார்.

அதிகாரம் நினைத்தால் யாருக்கும் எந்தச் சூழலிலும் தேசத்துரோகி என்ற பட்டத்தை வாங்கித் தரமுடியும் என்பதை நெத்திப்பொட்டில் அடித்துச் சொல்கிறது படம். ஆனால் சி.பி.ஐ மட்டும் ராக்கெட்ரி படத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக கட்டமைக்கப் பட்டிருக்கிறது. But நிஜம் வேறு. ஆனால் சி.பி.ஐ தான் இந்த வழக்கைப் பொய் என கண்டுபிடித்தது என்பதும் வரலாறு. முன்பாதி படம் எதோ விஞ்ஞானம் தொடர்பான கஷ்டமான புத்தகத்தைப் படித்தது போன்ற உணர்வு. நிறைய இடங்களில் அயர்ச்சி ஏற்பட்டதும் உண்மை. பின்பாதியில் வந்த சில எமோஷ்னல் காட்சிகள் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. இப்படத்தை இன்னும் தரமாக தந்திருக்க முடியும் என்றாலும் தந்த வரைக்கும் ஓரள்வு நிறைவே என்பதால் ராக்கெட்ரி நோக்கி ஒருமுறை செல்லலாம்

3/5