சிம்பு ரிலீஸ் செய்யும் பிரசாந்த்தின் ‘சாஹசம்’ பட ப்ர்ஸ்ட் லுக்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக நடித்து வரும் பிரசாந்த்தின் சாஹசம் படம் ரிலீசை நெருங்கியுள்ளது.
ஜோடியாக அமண்டா என்கிற ஆஸ்திரேலிய அழகி நடிக்கும் இப்படத்தில் நாசர், தம்பி ராமையா, சோனு சூட், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், சின்னி ஜெயந்த், பெசன்ட் நகர் ரவி, சுவாமிநாதன் என நட்சத்திரப்பட்டாளம் நடித்துள்ளது. மேலும் படத்தில் பிரபல ஹிந்தி நடிகையான நர்கீஸ் ஃபக்ரியும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
எஸ்.எஸ்.தமன் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை ஸ்ரேயா கோஷல், சங்கர் மகாதேவன், மோஹித் சவான், அனிருத், சிம்பு ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.
ஒரு பாடல் மட்டும் மலாய் மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதற்காகவே படத்தின் சிங்கிள் ட்ராக் ஆடியோ பங்ஷனை மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார் தியாகராஜன்.
தொடர்ந்து படத்தின் ஆடியோ பங்ஷனை சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தவும் முடிவு செய்திருக்கிறார் தியாகராஜன்.
இந்த விழாவில் படத்தில் பாடல்களைப் பாடிய பின்னணி பாடகர்கள், பாடகிகள் எல்லோரும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.
சாஹசம் படத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பாடல்களை மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர்.
‘சாஹசம்’ படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நாளை ஆகஸ்ட் 5-ம் தேதி நடிகர் சிம்பு வெளியிடுகிறார்.
விரைவில் பிரசாந்த்தின் சாஹசத்தை ரசிகர்கள் பார்க்கலாம் என்றார் தியாகராஜன்.