விக்ரமும், விஜய் மில்டனும் சாடிஸ்ட்டுகள் : போட்டுத் தாக்கிய சமந்தா!
‘இந்தப் படத்தில் மிருகங்கள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை விக்ரமைத் தவிர…’ என்று ரசிகர்களே இரக்கப்பட்டு கமெண்ட் அடிக்கிற அளவுக்கு ‘ஐ’ படத்துக்காக தனது உடலை வருத்தியிருந்தார் விக்ரம்.
எப்படி அந்தப் படத்தில் முழு அர்ப்பணிப்போடு நடித்திருந்தாரோ? அப்படி ஒரு அர்ப்பணிப்போடு தான் விக்ரம் ’10 எண்றதுக்குள்ள’ படத்திலும் நடித்திருக்கிறார் என்றார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன்.
‘கோலி சோடா’ வெற்றிக்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடி சமந்தா.
இன்று காலை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் ரிலீஸ் பங்ஷன் சென்னையில் நடைபெற்றது.
புரமோஷனுக்காகவே படப்பிடிப்புகளிலிருந்து பெர்மிஷன் போட்டு மெனக்கிட்டு வந்திருந்தார்கள் விக்ரமும் சமந்தாவும்.
விக்ரமை ஒரு நடிப்புத் தீவிரவாதின்னு சொல்லியிருந்தீங்க… அதை அப்படியே அவரோட பெயருக்கு முன்னால போடுவீங்களா.. என்றார் ஒரு நிருபர்.
கண்டிப்பா போடலாம் சார். எப்படி ஐ படத்துக்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருந்தாரோ அந்தளவுக்கு இந்தப்படத்துக்கும் கொஞ்சமும் யோசிக்காம கஷ்டப்பட்டு நடிச்சார். அதனால தான் நடிப்புத் தீவிரவாதின்னு சொன்னேன். அதுக்குத் தகுதியான ஆள் தான் விக்ரம் என்றார் விஜய் மில்டன்.
விஜய் மில்டனின் இயக்கத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? கேட்டதும் சீரியஸாகவே பதில் சொல்ல ஆரம்பித்தார் சமந்தா.
அவர் எப்படி நடிக்கச் சொன்னாரோ அப்படித்தான் நான் இந்தப் படத்துல நடிச்சேன். அப்படி இருந்தும் கூட என்னை ஸ்பாட்ல அடிச்சார். என்னோட கைகள்ல காயங்கள் கூட ஏற்பட்டுச்சு. மொத்தத்துல ஒரு சாடிஸ்ட் மாதிரி நடந்துக்கிட்டார். என்றவரிடம் அப்போ ஹீரோ விக்ரம் எப்படி என்று ஒரு நிருபர் கேட்க, அவரும் அதே கேட்டகிரி தான் என்றார் சமந்தா.