சர்ச்சையை கிளப்பி விட்ட பிரகாஷ்ராஜ் விளம்பரம்!

Get real time updates directly on you device, subscribe now.

prakashraj1

மீபத்தில் தொலைக்காட்சி முதல் ஆன்லைன் வரை நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்த ஒரு விளம்பரம் பெரும் சர்ச்சையை கிளப்பி கொண்டு இருக்கிறது.

டீஸர் எனப்படும் இத்தகைய விளம்பரம், எந்த பிரண்டால் உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. அந்த விளம்பரத்தில் கல்யாண வயதில் உள்ள பெண்களை அப்பெண்ணின் பெற்றோர்கள் டென்ஷன் என குறிப்பிடுவதும் அதற்க்கு பிரகாஷ்ராஜ் ‘கல்யாண வயசுல பொண்ணுங்க இருந்தாலே டென்ஷன் தானே’ என கூறுவதை போல் அமைந்துள்ளது.

Related Posts
1 of 2

இந்த விளம்பரம் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் மக்களால் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கல்யாண வயசுல பெண்கள் இருந்தால் உண்மையில் பெற்றோர்களுக்கு டென்ஷன் தானே என ஆதரிப்பது போல் ஒரு சாரரும், பெண்களை டென்ஷன் என எப்படி குறிப்பிட முடியும் என ஒரு சாரரரும் காரசார விவாதத்தில் இடுபட்டு உள்ளனர்.

ஆகஸ்ட் 15 அன்று தெரியும் யார் சொல்வது சரி என்று.