வருஷத்துக்கு ஒண்ணு கன்பார்ம் : வேகம் எடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி

வருஷத்துக்கு ஒரு படமாவது தாருங்கள் என்பது தான் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினியிரம் ரசிகர்கள் வைத்து வரும் கோரிக்கை.
ரஜினி நடித்த படத்தின் ஆடியோ பங்ஷனில் கலந்து கொள்ளும் பிரபலங்களும் கூட இதே கோரிக்கையை அந்த மேடையிலேயே ரஜினியிடம் வைத்த நிகழ்வுகள் கூட உண்டு. அந்த கோரிக்கைக்கு இப்போது செவி சாய்க்க ஆரம்பித்து விட்டாரோ என்றே தோன்றுகிறது சமீபகாலமாக ரஜினியின் நடவடிக்கைகள்.
பல சர்ச்சைகளை கிளப்பிய லிங்கா படத்துக்குப் பிறகு வேகம் எடுத்திருக்கும் ரஜினிகாந்து வருஷத்துக்கு ஒரு படமாவது கொடுத்து விடுவது என்று நினைத்து விட்டார் போலும்!
சமீபத்தில் கபாலி படப்பிடிப்பை முடித்துக் கொடுத்த ரஜினி வழக்கம் போல ஓய்வெடுக்கப் போகாமல் உடனடியாக அடுத்த படமான ஷங்கரின் இயக்கத்தில் 2.0 படத்தில் நடிக்கப் போய் விட்டார்.
ரஜினி நடிக்க வேண்டிய முக்கியமான காட்சிகளை படமாக்கி வரும் ஷங்கர் அடுத்து ரஜினியுடன் அக்ஷய்குமார் இணைந்து நடிக்கும் காட்சிகளை எடுக்க திட்டமிட்டு வருகிறார்.
அந்த கணக்குப்படி பார்த்தால் இந்த ஆண்டு கபாலி, அடுத்த ஆண்டு 2.0 படங்களைத் தரப்போகும் ரஜினி 2018 ஆம் ஆண்டுக்கும் ஒரு படத்தை தர இப்போதே தயாராகி விட்டாராம்.
‘சந்திரமுகி’ மெகாஹிட் படத்தை இயக்கிய டைரக்டர் பி.வாசு கன்னடத்தில் இயக்கியிருக்கும் சிவலிங்கா படம் அங்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப்படத்தைப் பார்த்து அசந்து போன ரஜினி அதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
‘சந்திரமுகி’ பாணியிலேயே திகில், சஸ்பென்ஸ், ஃபேமிலி போன்ற அம்சங்களைக் கொண்ட படமென்பதால் கண்டிப்பாக படம் பெரிய அளவில் ஹிட்டாகும் என்பது ரஜினியின் நம்பிக்கை.
இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிற நிலையில் 2018ல் ஒருபடம் கன்பார்ம் ஆகி விட்டது.