படப்பிடிப்பில் முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்!

Get real time updates directly on you device, subscribe now.

சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் டி.சிவராம் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரித்து வரும் படம் ‘சண்டிமுனி’. நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார்.

இந்த படத்திற்காக சென்னை வளசரவாக்கம் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அரங்கும் சிலையும் அமைக்கப் பட்டது. முப்பது அடி உயர சிலை அமைக்கப் பட்டு அதன் முன் மனிஷா யாதவ் பக்தி ரசம் சொட்ட

“பெரும் கோபக்காரா

எங்க சண்டி வீரா

தொல்லை தீர்க்க வாடா

Related Posts
1 of 136

ஆவி ஓட்ட வாடா”

என்று பாட்டு பாடி ஆடிய இந்த பாடல் காட்சியில் 40 நடன கலைஞர்களும், 300 துணை நடிகர் நடிகைகளும் பங்கேற்க அசோக்ராஜா நடன அமைப்பில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் தீ மிதி காட்சிகளும், ஆணி செருப்பில் நடப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.

படம் பற்றி இயக்குனர் மில்கா செல்வகுமாரிடம் கேட்டோம்..

இது ஒரு ஹாரர் படம். நட்ராஜ் – மனிஷா யாதவ் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் நட்ராஜுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையில் இருந்து அவர் விடுபடவும் இருவருக்கும் திருமணம் நடக்கவும் குல தெயவ வழி பாட்டு காட்சி தான் இது என்றார் இயக்குனர்.

90 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. பழனி கொடைக்கானல் நெய்க்காரன்பட்டி பொள்ளாச்சி வால்பாறை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடை பெற்றுள்ளது.