சந்தானத்தை கூட்டிக்கொண்டு அமெரிக்கா கிளம்புகிறார் செல்வராகவன்!

Get real time updates directly on you device, subscribe now.

santhanam

சில கூட்டணிகளை ஆச்சரியத்தோடு அதிர்ச்சியையும் கொடுக்கும். அப்படித்தான் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ்.ஜே சூர்யா – கெளதம் மேனனுடன் செல்வராகவன் போட்ட கூட்டணி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

மூன்று பேருமே ஷூட்டிங் ஸ்பாட்டில் பிபி ஏறுகிற அளவுக்கு டென்ஷன் பார்ட்டிகள். இந்த மூன்று பேரும் ஒரே படத்தில் இணைந்தால் அந்த படப்பிடிப்பு எப்படியிருக்கும்?

ஆனாலும் மூன்று திறமைசாலிகளும் ஒரே படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எக்ஸ்ட்ரா எதிர்பார்ப்பு.

அந்த ஆச்சரியத்திலிருந்தே ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் அடுத்து சந்தானம் ஹீரோவாக நடிக்க புதுப்படம் ஒன்றை இயக்கப் போவதாக அறிவித்தார் செல்வராகவன்.

இது ரசிகர்களுக்கு இன்னும் பேரதிர்ச்சி. எப்படி இது சாத்தியமானது என்கிற யோசனையிலிருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. ஆனால் செல்வ ராகவனுக்கு ஹியூமர் எப்போதுமே அத்துப்படி என்பதால் இந்தக்கூட்டணி சாத்தியமானது என்கிறார்கள்.

Related Posts
1 of 10

ஊர் என்ன வேணும்னாலும் சொல்லிவிட்டுப் போகட்டும் நான் என் வேலைகளைப் பார்க்க கிளம்பி விட்டேன் என்கிறார் செல்வராகவன்.

ஆமாம், மன்னவன் வந்தானடி என்று டைட்டில் வைக்கப்பட இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

தொடர்ந்து காரைக்குடியிலும் முக்கியமான காட்சிகளை எடுக்க நினைத்திருக்கும் செல்வராகவன் தற்போது சந்தானம் உள்ளிட்ட படக்குழுவை கூப்பிட்டு அமெரிக்கா கிளம்பி விட்டார். அங்கும் முக்கியமான காட்சிகளை படமாக்கும் செல்வராகவன் இப்படத்தை ஒரு ரொமாண்டிக் காமெடிப்படமாக தர இருக்கிறார்.

சந்தானத்துக்கு ஜோடியாக அதிதி அறிமுகமாக பிலிம் ட்பார்ட்மெண்ட் நிறுவனம் சார்பில் சுஷாந்த் இப்படத்தை தயாரிக்கிறார்.

ரசிகர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’யாக அமையட்டும்!