தனுஷ் வர்றாரா…? அப்போ நானும் வருவேன் : மோதும் சிவகார்த்திகேயன்

Get real time updates directly on you device, subscribe now.

dhanush

சிவகார்த்திகேயன் சினிமா கேரியருக்கு தனுஷ் எந்தளவுக்கு உதவியாக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அதேபோலவே இருவரும் ஒருவருக்கொருவர் பேசுவதை குறைத்து, சந்திப்பையும் குறைத்து ஆளுக்கொரு பாதையில் சென்று கொண்டிருப்பதும் தெரிந்த விஷயம் தான்.

இதுகுறித்து இருவருமே வெளிப்படையாக வாய் திறந்து பேசவில்லை என்றாலும், இருவருக்குமிடையேயான நட்பு நல்ல நிலையில் இல்லை என்பது ஊரறிந்தது.

இப்படி நட்பு கெட்டு விட்ட பிறகு ஒருவர் வழியில் இன்னொரு குறுக்கிடுவதை முடிந்த வரையில் தவிர்க்கப் பார்ப்பது வழக்கமான ஒன்று.

அப்படியிருந்தும் தனுஷுடன் மோதும் சூழல் சிவகார்த்திகேயனுக்கு வம்படியாக வந்திருக்கிறது என்கிறார்கள் கோலிவுட்டில்!

Related Posts
1 of 64

முதல்முறையாக ராஜ்கிரணை ஹீரோவாக வைத்து ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இந்தப் படத்தை வருகிற 2017 எப்ரல் 14 புத்தாண்டு தினத்தில் வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்தும் விட்டார்.

இப்போது தனுஷ் தனது படத்தை ரிலீஸ் செய்கிற அதே நாளில் மோகன் ராஜா இயக்கத்தில் தான் நடித்து வரும் புதுப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட சிவகார்த்திகேயன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

படம் ஆகஸ்ட் மாதம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் என்பதால் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிடுவது தான் சரியாக இருக்கும் என்பது சிவகார்த்திகேயனின் யோசனையாம்.

அவரின் இந்த யோசனையை அன்றைய தினம் ரசிகர்கள் மத்தியில் தனக்கிருக்கும் செல்வாக்கை தனுஷுக்கு தெரிவிக்கும் விதமாகவே சிவகார்த்திகேயன் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.

மோதல் நல்லதா இருந்தா சரிதான்!