ஸ்ருதிஹாசனுக்காக காத்துக் கொண்டிருக்கும் ‘கேங்ஸ்டர்’ கூட்டம்!

Get real time updates directly on you device, subscribe now.

‘சிங்கம் 3′ படத்துக்குப் பிறகு ஸ்ருதிஹாசனை கோலிவுட் பக்கமே காணவில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று விசாரித்தால் அவர் பிரபல ஹிந்திப்பட இயக்குனர் மகேஷ் மஞ்ரேக்கர் படத்தில் பிஸியாக இருக்கிறார் என்கிறார்கள்.

புகழ்பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்க, பீரியட் ஃபிலிமாக தயாராகி வரும் இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம் பெயர்த்துள்ளார் இயக்குனர். இதில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

Related Posts
1 of 4

ஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்து பேசிய இயக்குனர் ”அவருடைய கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

தற்போது, லண்டனில் சர்வதேச இசைக் கோர்ப்பு சம்மந்தப்பட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார். அதை முடித்து விட்டு இந்தியா திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தக் கையோடு தனது அப்பா கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.