இன்னுமா சிம்பு WIN சிம்பு IN ? : ‘அப்டேட்’டில் இல்லாத டி.ஆரால் அப்செட்டான பாண்டிராஜ்

Get real time updates directly on you device, subscribe now.

tr2

சிம்புவை வைத்து ஒரு இயக்குநர் படம் இயக்க வருவதே அந்த ஏழுமலையான் செஞ்ச புண்ணியம். அப்படி ஒரு கண்டிஷனிலும் முன் வருகிற இயக்குநரையும் பாடாய்ப்படுத்தினால் அவருக்கு கோபம் வருமா வராதா?

வாரிசு நடிகர்களை வைத்து படம் இயக்குவதில் அந்த ஹீரோவின் டார்ச்சரை விட அவரது அப்பா செய்யும் டார்ச்சர்கள் தான் அதிகம்.

அதிலும் சிம்பு மாதிரியான நடிகர்களை வைத்து படமெடுப்பதெல்லாம் உலகத்தை சுற்றி வந்து ஞானப்பழம் வாங்கி வந்த கதையாகி விடும்.

‘போடா போடி’ படத்தின் பலத்த அடிக்குப் பிறகு சிம்புவை வைத்து யாருமே படம் இயக்கவோ, தயாரிக்கவோ முன் வராத போது சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்தார் சிம்பு.

டைரக்டர் பாண்டிராஜூக்கு அழைப்பு வந்தபோது ”போய்டாதீங்க.., அப்புறம் மாட்டிப்பீங்க…” என்று எச்சரித்த கோடம்பாக்கத்தினரே அதிகம். அப்படி இருந்தும் தைரியமாக சிம்புவின் வீட்டுக் காம்பவுண்ட்டுக்குள் எண்ட்ரி போட்டார்.

எதிர்பார்த்தபடியே படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை ஏகப்பட்ட பஞ்சாயத்துகள். அந்த இம்சைகளையெல்லாம் தாண்டி ஒரு வழியாக படத்தை முடித்துக் கொடுத்த பாண்டிராஜ் ”அப்பாடா… ஒரு வழியா படத்தை முடிச்சாச்சு” என்று ஒரு வருடத்துக்கு முன்பாகே ரிலாக்ஸ் ஆகி விட்டார்.

Related Posts
1 of 49

இப்போது விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் கடந்த பத்து நாட்களாக வரும் இது நம்ம ஆளு படத்தின் டீஸர், ஆடியோ ரிலீஸ் விளம்பங்களைப் பார்த்து ரொம்பவே அப்செட்டாகியிருக்கிறாராம் டைரக்டர் பாண்டிராஜ்.

பப்ளிசிட்டி வேலைகளை பார்க்க வேண்டிய பொறுப்பு அப்படத்தின் இயக்குநருக்குத்தான் உண்டு. ஆனால் இது சொந்தப்படம் என்பதால் தன்னுடைய மேற்பார்வையில் பப்ளிசிட்டி வேலைகளை செய்து வரும் டி.ஆர்  பட விளம்பரங்களில் சிம்பு win சிம்பு IN என்கிற வாசகத்தோடு விளம்பரப்படுத்தி வருகிறாராம்.

ஏதாவது மொக்கை ஹீரோவோ, அல்லது சுமாரான பட்ஜெட்டில் எடுக்கப்படுகின்ற படங்களிலோ தான் ஹீரோக்கள் தங்கள் பெயருக்கு முன்னால் WIN, IN என்கிற வார்த்தைகளை சேர்த்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட வாசகத்தோடு வரும் விளம்பரங்கள் என்றாலே அந்தப் படங்களை சினிமாக்காரர்களால் பார்க்கும் பார்வையே வேறு?

ஆனால் சுமார் 30 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டிருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் விளம்பரம் எவ்வளவு ரிச்சாக இருக்க வேண்டும்?

இயக்குநர் செய்ய வேண்டிய அந்த விளம்பர டிசைன் வேலையை அடம்பிடித்து டி. ஆரே செய்வதால் தொழில்நுட்ப ரீதியாக ‘அப்டேட்’டில் இல்லாமல் இப்படிப்பட்ட விளம்பரங்களால் படத்தின் தரத்தையும் , எதிர்பார்ப்பையும் இவரே குறைக்கிறாரே என்று அப்செட்டாகியிருக்கிறாராம் டைரக்டர் பாண்டிராஜ்.

என்ன பண்றது? உடும்பு பிடியில மாட்டினா, தப்பிக்கிறது கஷ்டம் தான்!