தயாராக இருக்கும் சோனியா அகர்வால் : யாருப்பா… அந்த நல்ல மனுஷன்!

Get real time updates directly on you device, subscribe now.

sonia

னுஷின் ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் சோனியா அகர்வாலை தமிழில் அறிமுகம் செய்தார் செல்வராகவன். அதோடு அவரை கடந்த 2006 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். 4 வருட குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு 2010 ஆம் ஆண்டு சோனியா அகர்வாலைப் பிரிந்து விட்டார்.

செல்வராகவன் இப்போது கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டாலும் சோனியா அகர்வால் இன்னும் மறுமணம் செய்து கொள்ளாமல் தேடி வருகின்ற படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரிலீசான பாலக்காட்டு மாதவன் படத்தில் விவேக்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஒரு பொறுப்புள்ள அம்மாவாக நடித்திருக்கும் சோனியா அகர்வாலின் நிஜ வாழ்க்கையோ அதற்கு நேர் மாறாக இருக்கிறது.

Related Posts
1 of 3

ஆணைப் பிரிந்து வாழும் பெண்களின் வாழ்க்கை கொஞ்சம் ஆபத்தானது என்று சமூகம் சொன்னாலும் தான் அப்படி உணரவில்லை என்கிறார் சோனியா.

நான் தனிமையில் இருப்பதாக எப்போதுமே உணர்ந்ததில்லை. என்னைச் சுற்றி என் நட்பு வட்டம் இருக்கு. நான் செல்வராகவனை மிஸ் பண்றேன். ஆனாலும் வருத்தமில்லை. ஒரு பிரேக்-அப் அவ்வளவு தான். என் வாழ்க்கையை நான் ‘என்ஜாய்’ பண்றேன். யாருக்கு இதில் கவலை! நான் பார்ட்டிக்கு போக முடிவதால் போகிறேன். யாரையும் தொந்தரவு பண்ணலியே.! என்று சொல்லும் சோனியா அகர்வால் என்னைப் புரிந்து கொள்ளும் சரியான ஆண் கிடைத்தால், அவரை எனக்குப் பிடிச்சிருந்தால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் அதிரடியாக…

யாருப்பா… அந்த நல்ல மனுஷன்!