ரஜினிகாந்த்தை நக்கலடிக்கும் படம்? : ஹீரோ பவர் ஸ்டாராம்!

Get real time updates directly on you device, subscribe now.

rajini

‘லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரத்தின் கிளைமாக்ஸ் என்னவானது என்கிற கேள்விக்கு மெளனமே பதிலாக இருக்கிறது. என்றாலும் அந்த மெளனத்தின் பின்னணியில் ஒரு மிகப்பெரிய வேலை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

‘லிங்கா’ படத்தின் நஷ்டஈடு விவகாரத்தில் ஏற்பட்ட அத்தனை பிரச்சனைகளும், அது சம்பந்தமாக நடந்த தொடர் சம்பவங்களையும் வைத்து ரஜினிகாந்த்தை கிண்டல் செய்து ஒரு திரைப்படம் தயாராகப் போகிறதாம். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேரக்டரில் நடிக்கப் போவது யார் தெரியுமா?

பவர்ஸ்டார் சீனிவாசன்.

இந்தப் படத்தை தயாரிப்பது வேறு யாருமல்ல… லிங்கா விநியோகஸ்தர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்திய சிங்காரவேலன் தான் தயாரிக்கப் போகிறார். இதற்காக ஆரம்பக் கட்ட வேலைகள் தடபுடலாக நடந்து வருகிறது.

Related Posts
1 of 66

இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். இதுகுறித்து அவர் என்ன சொல்கிறார்?

‘லிங்கா பட பிரச்சனையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் படத்தில் நான் நடிப்பது உண்மை தான். ஆனால் நான் இந்த படத்தில் நடிக்க கமிட்டான போதே எந்த காரணத்தை கொண்டும் தலைவரை அவமானப்படுத்தும் ஒரு காட்சி கூட படத்தில் இருக்கக்கூடாது என்று கண்டிஷன் போட்டு விட்டேன். படத்தோட டீமும் அதற்கு சம்மதம் சொன்னவுடன் தான் கால்ஷீட் கொடுத்தேன். என்று கூறியிருக்கிறார்.

தொடரந்து பல ஹிட் படங்களை கொடுத்து வரும் ஒரு மாஸ் நடிகர், திடீரென ஒரு ப்ளாப் படம் கொடுத்தால் என்னென்ன பிரச்சனைகள் நடக்கும் என்பதைத் தான் காமெடியாகச் சொல்கிறார்களாம்.

படம் ரிலீசாகிறப்போ என்னென்ன பிரச்சனைகள நடக்கப் போகுதோ..?