ரஜினியின் அரசியல் வாரிசு யார்? – பீதியைக் கிளப்பிய தனுஷ் ரசிகர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

ஒரு குடும்ப ஆட்சி, ஒரு அடிமை ஆட்சி இந்த இரண்டு ஆட்சிகளுக்கும் மாற்றாக ஓரளக்காவது மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு அரசியல் தலைமை தங்களுக்குக் கிடைக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்.

இந்தச் சூழலில் தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப திரையுலகில் இரு துருவங்களாக இருக்கும் கமலும், ரஜினியும் போட்டி போட்டு களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இதில் கமல் தன் பாணியில் அரசியல் நகர்வை வேகமாக நகர்த்திக் கொண்டிருக்க, ரஜினியோ எப்படி எல்லா விஷயங்களிலும் மெதுவாக நகர்த்துவாரோ அதே பாணியில் மெதுவாக நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த போதே ”என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அரசியலுக்கு வருகிறேன். அதனால் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இருப்பவர்கள் யாரும் என் பக்கத்தில் கூட வந்து விட வேண்டாம்.” என்றார் ரஜினி. அப்படிச் சொன்னவர் ”என்னுடைய அரசியல் பயணத்தில் என் குடும்பத்தினருடைய தலையீடு இருக்காது” என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை.

தற்போது ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரது குடும்பத்தினரின் தலையீடு இருக்குமென்று தனுஷ் ரசிகர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

Related Posts
1 of 98

ரஜினியின் மருமகனும், முன்னணி நடிகர்களின் ஒருவருமான தனுஷை ரஜினியின் வருங்கால அரசியல் வாரிசாக அறிவித்து போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்கள் தனுஷின் மதுரை மாவட்ட ரசிகர்கள்.

நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளான இந்த போஸ்டரில் ”வருங்கால அரசியல் வாரிசே..!” என்று தனுஷை வரவேற்று வாசகங்களை அச்சிட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் முக்கியமான பிரச்சனைகளில் கருத்து சொல்லாமல் தவிர்க்கும் ரஜினி இந்த போஸ்டர் பரபரப்புக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

வழக்கம் போல இதற்கும் பதில் சொல்வதை தவிர்த்து விட்டு குடும்ப அரசியலை கட்டமைக்க முயற்சி செய்வது உண்மையானால் பி.ஜே.பியை விட மோசமான தோல்வியைத்தான் அவருக்கு தமிழக மக்கள் கொடுப்பார்கள் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

மெளனம் கலையுங்கள் வேங்கை மகனாரே!