கையப் புடிச்சி இழுத்தியா? : நள்ளிரவு விளையாட்டில் தனுஷ் – சுசித்ரா செம கலாட்டா!
முன்பெல்லாம் இரவுப் பார்ட்டிகளில் கலாட்டா என்று கோலிவுட் பிரபலங்களைப் பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகும்.
ஆனால் சமீபகாலமாக அப்படிப்பட்ட அசிங்கங்கள் எல்லாம் அதிகம் வெளியாவதில்லை. இல்லை அந்த மாதிரியான செய்திகளை வெளியாகாமல் பிரபலங்கள் அடக்கி வாசித்து வந்தார்கள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
இதோ நடிகர் தனுஷ் – பாடகி சுசித்ரா ஆகியோரின் விளையாட்டு வில்லங்கத்தால் மீண்டும் சந்திக்கு வந்திருக்கிறது கோலிவுட் பிரபலங்களில் நள்ளிரவுக் கலாட்டா.
பிரபல பாடகி சுசித்ரா பிப்ரவரி 21-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் காயம்பட்ட தனது கையின் புகைப்படத்தை வெளியிட்டு ‘இது தனுஷ் கூட்டத்தின் மோசமான ஆட்களால் ஆன காயம். மன்னியுங்கள். நீங்கள் தகுதி இழந்து விட்டீர்கள் தனுஷ்’ என்று அந்தப் புகைப்படத்துக்கு விளக்கம் கொடுத்து தனுஷுக்கு எதிராக மேலும் சில ட்விட்டுகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார்.
அதையெல்லாம் பார்த்தவர்கள் என்ன நடந்தது? என்ன விளையாட்டு? என்று குழம்பித் தவிக்க, அதற்கான எந்த விளக்கத்தையும் இதுவரை தரவில்லை சுசித்ரா. அதோடு ‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன்’ என்று தனது செல்பி புகைப்படத்தை மட்டும் வெளியிட்டார்.
இதே சுசித்ரா தான் பிப்ரவரி 20-ம் தேதி ‘தனுஷ் நீங்கள் கடவுள். உங்கள் காலை காட்டுங்கள் என்றும் அவரைப் பாராட்டியும் இருக்கிறார்.
அதோடு நீங்களும் கூடவே தானே இருந்தீர்கள் சிம்பு? என்று சிம்புவையும் இந்தப் பிரச்சனையில் கோர்த்து விட்டிருக்கிறார்
ஆக சிம்பு கண் முன்னால் தனுஷ் – சுசித்ரா ஆடிய நள்ளிரவு விளையாட்டில் ஏதோ செமத்தியாக கலாட்டா நடந்திருக்கிறது. அதில் தான் சுசித்ராவுக்கு கையில் காயம் பட்டிருக்கிறது என்பது மட்டும் அரசல் புரசலாக தெரிய வந்திருக்கிறது.
அதே சமயம் அது என்ன விளையாட்டு? யாரால் பிரச்சனை ஆரம்பமானது? அதில் யார் மீது தவறு? என்று சுசித்ரா போட்டிருக்கும் ட்விட்டுகளால் பல கேள்விகள் தொக்கி நிற்கிறது.
ரசிகர்கள் மத்தியில் தனுஷ், சிம்பு போன்ற ஹீரோக்களுக்கு இருக்கும் ‘நல்ல பசங்க’ இமேஜை டேமேஜ் ஆகாமல் இருக்க வேண்டுமென்றால் நடந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்களில் யாராவது ஒருவர் வாயைத் திறந்து சொன்னால் தான் உண்டு!
சொல்வீங்களாப்பா..?