சூர்யா 35 : கரெக்‌ஷன் மேட்டரில் சூர்யாவை கவிழ்த்த விக்னேஷ்சிவன் #Suriya35

Get real time updates directly on you device, subscribe now.

suriya1

சூர்யாவிடம் கதை சொல்லி சம்மதம் வாங்குவதென்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.

ஏற்கனவே இயக்குநர் கெளதம் மேனன், பா.ரஞ்சித் ஆகியோர்கள் எழுதியும் , எழுதாமல் கொண்டு வந்து கொடுத்த கதைகளில் ஒன்றிரெண்டு கரெக்‌ஷன்களைச் சொல்லியதால் தான் மேற்படி இருவருமே சூர்யாவை இயக்கவில்லை.

அந்தளவுக்கு கதை கேட்பதில் கை தேர்ந்தவரான சூர்யாவிடம் விக்னேஷ் சிவன் மட்டும் எப்படி அவருடைய குட்புக்கில் செலெக்ட்டானார் என்பது தான் கோலிவுட் மூக்கில் விரலை வைத்து புருவம் உயர்த்தும் விஷயம்.

ஆனால் கெளதம் மேனன் மாதிரியோ, பா.ரஞ்சித் மாதிரியோ விக்னேஷ் சிவனெல்லாம் தனது கதையில் எதையுமே கரெக்‌ஷன் செய்ய விட மாட்டேன் என்று அடம்பிடிக்கவில்லை.

Related Posts
1 of 45

மாறாக உங்களுக்கு சரியில்லாததுன்னு தோணுற எந்த விஷயத்தையும் படத்துல சேர்க்கத் தேவையில்லை. நீங்க சொல்ற கரெக்‌ஷனை சேர்த்துக்கிறேன் என்று பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தாராம்.

அதனால் இன்றைக்கு விக்னேஷ் சிவனுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சூர்யா.

எப்படியும் விக்னேஷ் சிவன் இயக்கப்போவது ஒன்றும் காவியமாக இருக்கப்போவதில்லை. க்ளாஸ் படமாகவும் இருக்கப்போவதில்லை.

பக்காவான கமர்ஷியல் மாஸ் படம் வேண்டும் என்பது தான் சூர்யாவின் இப்போதைய தேவை. அதற்குத் தான் தோதான ஆளாகி விட்டார் விக்னேஷ் சிவன்.

படத்துல சூர்யாவோட ஜோடி யார் நயன் தாரா தானே? என்று ரசிகர்களே கமெண்ட் அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.