படங்களை விமர்சிப்பதெல்லாம் இருக்கட்டும், நம் கல்வியைப் பற்றி பேசுங்கள்! : சூர்யா வைத்த சூடு!

Get real time updates directly on you device, subscribe now.

‘அகரம்’ அமைப்பை ஆரம்பித்த பிறகு நடிகர் சூர்யா கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும், அதன் மேம்படுத்தலிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்.

நேற்று நடந்த “ நீட்” மருத்துவ நுழைவு தேர்வுக்கான புத்தக வெளியீட்டு விழாவில் சமகால கல்வி நிலை குறித்தும் மனம் திறந்து ஆக்கப்பூர்வமான கருத்துகளை மனம் திறந்து பேசினார்…

”அயன்” படம் 2007 வந்து நான் டான்ஷிபார் என்ற இடத்துக்கு சென்றேன். அங்கே படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது , அது ஒரு தீவு. அங்குள்ளவர்கள் எனக்கு அவர்களுடய பாரம்பரிய நடனத்தை கற்றுக் கொடுத்து வந்தார்கள். அங்குள்ள மக்களுக்கு மற்ற மொழி தெரியவில்லை. ஆனாலும் 70 வயதுடைய ஒரு மனிதர் மிக அற்புதமாக ஆங்கிலத்தில் பேசினார். அவருடைய உடை, நடவடிக்கை, செயல் எல்லாம் வித்தியாசமாக இருந்தது.

பின்புதான், அங்கு ஒரு போர் ஒன்று நடைபெற்றிருக்கிறது என்றும், அதில் அனைத்து கல்விக்கூடங்களும் அழிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு நல்ல கல்விக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என்று எதுவும் கிடையாது. என்கிற விஷயம் தெரிய வந்தது. டான்ஷிபாரில் உள்ளவர்கள் சாராய கடைகள் வைத்துள்ளனர். இல்லையென்றால் சாதாரண கூலி வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இருந்தாலும் 60, 70 வயதான அனைவருக்கும் நல்ல அறிவும், திறமையும் இருந்தது.

ஒரு நல்ல கல்விக்கூடம் இல்லை என்றால் ஒரு அணு ஆயுதம் என்ன விளைவை எற்படுத்துமோ அதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குறையுள்ள பள்ளிகளும் குறையுள்ள கல்லூரிகளும் இருந்தது என்றால் அங்கு அதன் பாதிப்பு பல மடங்காக இருக்கும்.

Related Posts
1 of 37

தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் படித்து முடித்த பின்பு கல்லூரிகளில் சேரும்போது அவர்கள் படுகின்ற கஷடங்களை நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம். தமிழ்வழி கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கும் நகர்புற வாழ்க்கையை வாழ படும் கஷ்டங்கள் மிகவும் கடினமான ஒன்று. ராமசாமி என்கிற மாணவன் கிட்டதட்ட 3 கிலோமீட்டர் நடந்து வந்து பள்ளியில் படிக்கிறார். நல்ல மதிப்பெண்கள் வாங்குகின்றார். அவருக்கு PSG பொறியியல் கல்லூரியில் இலவசமாக இடம் கிடைக்கிறது. அனைத்து பொருளாதார உதவிகளும் கிடைக்கிறது . ஆனாலும் அழுத்தம் காரணமாக படிக்காமல் பாதியிலேயே சென்று விட்டார். வருடா வருடம் கிட்டதட்ட 200, 300 மாணவர்களில் 2 மாணவர்களாவது எவ்வளவு உதவி, பாதுகாப்பு அளித்தாலும் அழுத்தம் காரணமாக திரும்பி சென்று விடுகிறார்கள். இதை கண்காணிக்க வேண்டியவர்கள் இதை பற்றி பேசுவதில்லை . இதற்கான எந்த உரையாடலும் எங்கேயும் இல்லை என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

இன்னும் சொல்ல போனால் ஒரு IAS அதிகாரி அவர்கள், அகரத்தை தொடர்பு கொண்டு விடுதியில் நிறைய தற்கொலைகள் நடக்கின்றன வெறும் மதிப்பெண்கள் குறைந்தால் அந்த அழுத்தம், தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றார். 2 வருடங்களுக்கு முன்பு நிறைய நடந்தது. அதை பற்றிய உரையாடல் நடந்தது. அதன் பின்பு என்ன நடக்கின்றது என்பது எனக்கு தெரியவில்லை. எந்த அளவிற்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. கால்களை கட்டி போடவில்லை. கட்டிபோட்டு ஓட்டபந்தயம் வைத்து முதலில் வந்தவருக்கு பரிசு கொடுக்கவில்லை . கிட்டதட்ட கால்களை வெட்டி போட்டு முதலில் வந்த மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகின்றோம்.

ஒரு படத்தை பார்த்து அதற்கு விமர்சனம் கொடுக்கிறோம் . அதை இப்படி பண்ணிருக்கலாம் அப்படி பண்ணிருக்கலாம் என்று படத்தின் இடைவேளை காட்சியை கொஞ்சம் மாற்றியமைத்திருக்கலாம் என்று உரையாடுகின்றோம். கிட்டதட்ட 25 லட்சம் மாணவர்கள் தொடக்க கல்வியில் சேருகிறார்கள். பின்பு பள்ளி முடித்து கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றவர்கள் 1 ½ லட்சம் மாணவர்கள் கூட கிடையாது. நிறைய மாணவர்கள் பின்தள்ளப்படுகிறார்கள்.

2800 இடங்கள் அரசு பள்ளியில் உள்ளது அதில் படிப்பவர்கள் 6௦ % மாணவர்கள் தான். இதுதான் நமது தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை. ஆனால் அவர்கள் மருத்துவ துறையில் நுழைய நிறைய கஷ்டங்களை எதிர் கொள்ளவேண்டியதாக உள்ளது. 2,3 இடங்கள் மட்டுமே ஒரு வருடத்திற்கு அவர்களுக்கு கிடைக்கின்றது.

மாணவர்கள் நீங்கள் ஒரு படத்தை பற்றி விமர்சனம் செய்கிறீர்கள் . டோனால்டு ட்ரம்பை அமெரிக்கா எப்படி பிரதமராக அறிவித்தது? என்பதை பற்றி அலசி ஆராய்ந்து பார்க்கும் நீங்கள் நமது கல்விமுறையை பற்றி பேசுவதில்லை. இந்த மாதிரி விஷயங்கள் அடிக்கடி நிகழாது. இப்பொழுது இந்த உலகம் இணையதள உலகமாக உள்ளது. ஒரு நிகழ்வு அனைவரிடமும் விரைவாக போய் சென்று விடுகின்றது. ஆனாலும் கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் ஒரு பெரிய வீரியம் இருந்தால் மட்டுமே நகரத்தில் பயணிக்க முடியும்.

மேலும் தமிழ்நாட்டையும் தாண்டி வேறு மாநிலத்துக்கும் போக முடியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அத்தனை கோடி மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்வது கல்வி மட்டுமே. எங்கேயாவது டிசைன் இன் இந்தியா என்ற வாசகத்தை பார்க்கின்றோமா ?? எப்போதாவது மேட் இன் இந்தியா என்ற வாசகத்தை பார்க்கின்றோம். அகரம் இதேபோன்ற கல்வி மேம்பாட்டு முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும் என்றார் சூர்யா.