காத்திருக்கும் அஜித் ரசிகர்கள் : கடுப்பேத்தாதீங்க… ‘சிறுத்தை’ சிவா
‘சிறுத்தை சிவா’ டைரக்ஷனில் அஜித் நடித்து வரும் 56 படத்துக்கு இன்னும் டைட்டில் அறிவிக்கவில்லை.
இதனால் மீடியாக்களும், ரசிகர்களும் ‘தல 56’ என்றே செய்திகளை பரப்பி வருகிறார்கள்
படப்பிடிப்பெல்லாம் முடிந்து ரிலீஸ் தேதியை நெருங்கி விட்ட சூழலில் கடந்த சுதந்திர தினத்தில் டைட்டிலை அறிவிப்போம் என்றார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
அதை நம்பி ட்விட்டரில் ட்ரெண்ட்டிங்கில் ஏற்ற தூங்காமல் காத்திருந்த அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பின்னர் ‘விநாயகர் சதுர்த்தி’ அன்று டைட்டில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பில் உறுதியாக சொல்லப்பட்டு வரும் நிலையில் நாளை விநாயகர் சதுர்த்திக்கு அஜித் பட டைட்டில் அறிவிக்கப்படும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.
டைட்டில் அறிவிக்கப்படுமா? அல்லது வழக்கம் போல அஜித் ரசிகர்கள் ‘இழவு காத்த கிளி’ போல இருக்க வேண்டுமா? என்பது நாளை காலைக்குள் தெரிந்து விடும்.
ஏற்கனவே பல மாசமா காத்துக்கிட்டிருக்காங்க அஜித் ரசிகர்கள், அவங்களை கடுப்பேத்தாதீங்க… ‘சிறுத்தை’ சிவா