இனிமே அந்த தப்பு நடக்காது : ரூட்டை மாற்றினார் விஜய் சேதுபதி
பீட்ஸாவில் தனது சினிமா எண்ட்ரியை சிறப்பாக ஆரம்பித்த விஜய் சேதுபதிக்கு கடைசியாக வந்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம் என அடுத்தடுத்த படங்கள் தோல்விப்படங்களாகி விட்டது.
கதை ஒரு பக்கம் இருந்தாலும், நண்பர்களுக்காக ஒரு சில படங்களை ஒப்புக்கொண்டதால் வந்த தோல்விகள் தான் அவர்.
அதோடு விட்டதா இம்சை.
விஜய் சேதுபதி புரோடக்ஷன்ஸ் என்ற பெயரில் சொந்தக் கம்பெனி ஆரம்பித்து ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தை தயாரித்தார். பெரிய எதிர்பார்ப்போடு ரிலீசான அந்தப்படமும் விஜய் சேதுபதிக்கு தோல்விப்படமாகத்தான் அமைந்தது.
ஏற்கனவே பல கோடி கடனில் இருந்ததாகச் சொன்ன விஜய் சேதுபதிக்கு ஆரஞ்சு மிட்டாய் தோல்வி கசப்பாகவே இனி சொந்தப்படமே தயாரிப்பதில்லை என்கிற முடிவை எடுத்திருக்கிறார்.
இருக்கிற மிச்ச மீதி கடன்களை எல்லாம் வெளிப்படங்களில் நடித்தே அடைத்து விட்டு இனி கதைத் தேர்விலும் கவனம் செலுத்துவதோடு தேடி வரும் தயாரிப்பாளர்கள் ‘பசையுள்ள’வர்கள் தானா? என்பதையும் உஷாராக பார்க்கிறாராம்.
சபாஷ் சரியான முடிவெடுத்தீங்க விஜய் சேதுபதி!