தனுஷ் ரசிகர்களை பழி தீர்க்கும் சிம்பு ரசிகர்கள்
சிம்பு நடித்த படங்களிலேயே ‘வாலு’ சந்தித்தது மாதிரி எந்தப்படமும் ரிலீஸ் நேரத்தில் சிக்கல்களை சந்தித்ததில்லை.
இதற்கு மேல் என்னால் ஜல்லி காசு கூட போட முடியாது என்று ஒதுங்கிக் கொண்ட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியிடம் படத்தை வாங்கி தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் ரிலீஸ் செய்கிறார் டி.ஆர். இதற்காக விஜய் மூலம் சுமார் 25 கோடி ரூபாய் கடனும் வாங்கியிருக்கிறார்.
எல்லாப் பிரச்சனைகளையும் சரிசெய்து நாளை ‘வாலு’ ரிலீசாகும் என்கிற சந்தோஷ செய்தி சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க, இதுதான் சமயம் என்று தனுஷ் ரசிகர்களை பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்.
‘மாரி’ படம் ரிலீசாகப் போகும் தினத்தில் தான் சிம்புவின் ‘வாலு’ படம் ரிலீசும் திட்டமிடப்பட்டது. திடீரென்று நீதிமன்றம் வாலு ரிலீசுக்கு தடை விதித்ததால் மாரி படம் சோலோவாக வந்து வசூலை அள்ளியது. அப்போது தனுஷ் ரசிகர்கள் ‘செஞ்சுருவோம்…’ என்கிற டயலாக்கைப் போட்டு சிம்பு ரசிகர்களை கலாய்த்து வந்தார்கள்.
இப்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிம்பு ரசிகர்கள் ‘செஞ்சுட்டோம்ல…’ அதாவது படத்தை ரிலீஸ் பண்ணிட்டோம்ல… என்று பொருள் வரும்படி ட்விட்டரில் ஸ்டேட்டஸ்களை போட்டு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
அக்கறைக்கு இக்கறை பச்சை.