”ஹேய் நம்ம கார்த்தி…” – ராஜஸ்தானில் ஒலித்த தமிழ்க்குரலால் குஷியான கார்த்தி!

Get real time updates directly on you device, subscribe now.

Untitled-1

‘காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் அடுத்த படமாக ரிலீசுக்கு தயாராகியிருக்கிறது ‘தீரன் அதிகாரம் ஒன்று’.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.

Related Posts
1 of 30

வழக்கமான போலீஸ் திரைப்படங்களில் இருந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மாறுபட்டு புதுமையான படமாக இருக்கும். படபிடிப்புக்காக ராஜஸ்தான் , ஜெய்சால்மர் போன்ற இடங்களுக்கு படபிடிப்புக்காக சென்றோம். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்கு பின் இந்தப் படத்துக்காகத்தான் அங்கே படம் பிடித்தோம். கடுமையான வெயில் மற்றும் குளிரை தாங்கிக் கொண்டு படபிடிப்பை நடத்த வேண்டியிருந்தது.

நான் ‘சிறுத்தை’ படபிடிப்பில் இருந்த போதே இந்தப் படத்தின் கதை எனக்கு தெரியும். இப்போது அதே கதை மீண்டும் என்னிடம் வந்தது. இந்தப் படத்தின் கதை என்னை சுற்றியே வந்து கொண்டே இருந்ததால் தான் இந்தக் கதையில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

ராஜஸ்தானுக்கு சென்றிருந்த போது ஒரு இடத்தில் ”இதோ நம்ம கார்த்தி…” என்று தமிழில் குரல் கேட்டது. அவர்களெல்லாம் நம்ம சென்னை, சௌகார்பேட்டை மக்கள் தான். அவர்களிடம் கேட்டபோது, பூஜைக்காகவும், குடும்ப நிகழ்வுகளுக்காகவும் வந்ததாகச் சொன்னார்கள். தமிழ்பேசுகிற மக்களை நான் அங்கு பார்த்தது எனக்கு குஷியாக இருந்தது. அந்த குஷியோடு படப்பிடிப்பை நடத்தி விட்டு வந்தோம்.

முழுக்க ஆக்‌ஷன் படமான இதில், ரகுல் ப்ரீத் சிங்குடனான காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது. போலீஸ் படமாக இருந்தாலும் இந்தப் படம் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இதில் நான் இயக்குநரின் நடிகராகத்தான் இருந்துள்ளேன்..!” என்றார் கார்த்தி.