உறுதிகொள் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Untitled-1

RATING : 2/5

ரியான புரிதலும், பக்குவமும் இல்லாத பள்ளிப் பருவத்தில் வருகிற காதல் உண்மையானது அல்ல, அது வெறும் இனக்கவர்ச்சி தான்.

அந்த காலகட்டத்தில் காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது. அப்படிப்போனால் என்ன மாதிரியான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதை படம் பிடித்துக் காட்டுவதே இந்த ‘உறுதி கொள்.’

பள்ளியில் சுமாராகப் படிக்கும் ஹீரோ கிஷோர் தன்னுடன் படிக்கும் சக மாணவியான ஹீரோயின் மேக்னாவை காதலிக்கிறார். இருவரது காதலையும் மேக்னாவின் அப்பா எதிர்க்கிறார்.

”பிளஸ் டூ பொதுத் தேர்வில் நீ நன்றாகப் படித்து பாஸ் ஆகி விட்டால் என் அப்பா நம் காதலுக்கு குறுக்கே நிற்க மாட்டார்” என்கிறார் மேக்னா. அதோடு காளி வெங்கட் மூலமாக பரீட்சையில் கிஷோர் பிட்டடிக்கவும் ஏற்பாடு செய்கிறார்.

இந்த பிட்டடிக்கிற விஷயம் பொதுத்தேர்வை நடத்தும் அதிகாரிகளுக்கு தெரிய வர, கிஷோரை பள்ளியை விட்டு நீக்குகிறார்கள். இதனால் ஊர்ப்பசங்களுடன் சேர்ந்து குடிப்பது, வெட்டியாக ஊரைச் சுற்றி வருகிறார். அப்போது ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவில் கிஷோரின் காதலி மேக்னா, தங்கை, இன்னொரு இளம் பெண் என சில மாணவிகள் காணாமல் போகிறார்கள்.

Related Posts
1 of 268

தங்கச்சியையும், காதலியையும் தேடிப்போகிற போது அவருக்கு அங்கே பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்தளவுக்கு என்ன நடந்தது?காணாமல் போன இளம் பெண்கள் என்ன ஆனார்கள்? என்பதே கிளைமாக்ஸ்.

‘பசங்க’ படத்தில் சிறுவனாகப் பார்த்த கிஷோரை இதில் ஒரு இளைஞராக அதுவும் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தவராகப் பார்ப்பதில் ரசிகர்களின் கவனம் பெறுகிறார்.

கிஷோர் காதலியாக வரும் நாயகி மேக்னா, நண்பனாக வந்து கலகலக்க வைக்கும் ‘சூப்பர் சிங்கர்ஸ்’ நிகழ்ச்சி புகழ் அகிலேஷ் மற்றும் கிஷோரின் அப்பாவாக கை தென்னவன், வருகிற காட்சியில் காமெடியால் கலகலக்க வைக்கும் காளி வெங்கட் என படத்தில் வருகிற அத்தனை பேரும் கேரக்டருக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜூட் லெனிகரின் இசையும், பாண்டி அருணாசலத்தின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்.

நாம் மறந்து போன பள்ளிக்கூடத்தில் செய்த சேட்டைகள், குறிப்பாக பரீட்சை நேரத்தில் பிடி அடிப்பதற்காக செய்கிற வேலைகள், டீச்சர் – வாத்தியார்களுக்கிடையே வரும் காதல், வாத்தியார்களுக்கும், மாணவர்களுக்குமிடையே நடக்கும் மோதல், குறும்புத்தனங்கள் என இடைவேளைக்கு முன்பாக காட்சிகளை கலகலப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் அய்யனார்.

பாலியல் பலாத்காரம், கத்தி, ரத்தம், வன்முறையான தாக்குதல் என திரைக்கதையின் ட்ராக் மாறாமல் இடைவேளைக்குப் பிறகும் அந்த கலகலப்பு தொடர்ந்திருந்தால் பள்ளிக்கூட ஞாபகங்களை மீட்டெடுத்த ஒரு நல்ல படமாக அமைந்திருக்கும்.