கொட்டுது காசு! : ஆந்திராவிலும் அள்ளப்போகும் விஜய் ஆண்டனி!

Get real time updates directly on you device, subscribe now.

vijay-antony1

அகலக்கால் வைக்காமல் ஒவ்வொரு படத்தின் கதையையும் தனக்கு செட்டாகிறதா? இல்லையா? என்று ரொம்ப யோசித்து யோசித்து தான் படங்களை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி.

அந்த நேக்கு போக்கு இருப்பதால் தான் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

தமிழில் அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட்டுகளை கொடுத்து வரும் விஜய் ஆண்டனிக்கு இப்போது அண்டை மாநிலமான ஆந்திராவிலும் மவுசு ஏற்பட்டிருக்கிறது.

Related Posts
1 of 13

தமிழில் நடிக்கின்ற படங்கள் எல்லாமே வசூலில் பட்டையைக் கிளப்பி வருவதால் அவர் நடித்த அத்தனை தமிழ்ப்படங்களையும் தெலுங்கில் ரிலீஸ் செய்ய கடும்போட்டி நிலவி வருகிறது.

இதுவரை விஜய் ஆண்டனி நடித்த படங்கள் தமிழில் ரிலீசாகி சில வாரங்கள் கழித்து தான் ஆந்திராவில் ரிலீசானது. ஆனால் லேட்டஸ்ட்டாக வந்த பிச்சைக்காரன் படம் யாருமே எதிர்பாராத வசூலை அள்ளியதால் இனி வர இருக்கின்ற படங்களை தமிழில் ரிலீசாகும் அதே நாளில் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யுங்கள் என்று அங்குள்ள விநியோகஸ்தர்கள் ஆலோசனை சொல்ல விஜய் ஆண்டனியும் ஓ.கே சொல்லி விட்டாராம்.

விஜய் ஆண்டனி வீட்டுல பண மழை!